கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் 30-ந்தேதி வெளியீடு

கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் 30-ந்தேதி வெளியீடுகலந்தாய்வு ஜூலை 19-ந்தேதி தொடங்குகிறது கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் 30-ந்தேதி வெளியீடு துணைவேந்தர் பேட்டி | கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வருகிற 30-ந்தேதி வெளியிடப்படும் என்றும், கலந்தாய்வு ஜூலை 19-ந்தேதி தொடங்குவதாகவும் துணைவேந்தர் திலகர் கூறினார். நாமக்கல்லில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் குறித்த பட்டப்படிப்பு மற்றும் 3 தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் என மொத்தம் 4 இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. கால்நடை மருத்துவ படிப்பிற்கு இந்த ஆண்டு 23 ஆயிரம் பேர் ஆன்-லைனில் விண்ணப்பித்து உள்ளனர். தற்போது விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது, வருகிற 30-ந்தேதி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வு வருகிற (ஜூலை) 19-ந்தேதி தொடங்கி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும். மொத்தம் 380 மாணவர்கள் சேர்க்கப்படுவர். கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டில் விண்ணப்பித்து உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு புதிய படிப்பு எதுவும் இல்லை. அதேபோல புதிய கல்லூரிக்கும் வாய்ப்பு இல்லை. தனியார் கல்லூரிக்கு அனுமதி அளிக்கும் திட்டமும் இல்லை. கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் மூலம் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முடியாத நிலையில் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி