நீட் தேர்வில் முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம்பெறவில்லை.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டது.
முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம்பெறவில்லை.
பஞ்சாப், மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத் மாநிலங்களில் தலா 3 மாணவர்களும், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகாவில் தலா ஒரு மாணவரும் இடம்பெற்றுள்ளனர். முதல் 25 பேர் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் 11 பேர் பெண்கள்.
தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகவில்லை. அவர்கள் பயிலும் பாடத்திட்டத்தில் நீட் தேர்வை எதிர்கொள்வது மிகக்கடினம் எனப் பலரும் கூறிவந்த நிலையில், நீட் தேர்வில் முதல் 25 பட்டியலில் தமிழக மாணவர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை.
முதலிடத்தை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவ்தீப் சிங் பிடித்துள்ளார். அவர் 720-க்கு 697 மதிப்பெண் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அர்சித் குப்தா (695) பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மனிஷ் மூல்சந்தனி (695) பெற்றார்.
முதல் மூன்று இடம் பிடித்தவர்கள்:
1 நவ்தீப் சிங் - 697 99.999908 - பஞ்சாப்
2 அர்சித் குப்தா - 695 99.999725 - மத்தியப் பிரதேசம்
3 மனிஷ் முல்சந்தனி -695 99.999725- மத்தியப் பிரதேசம்