டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம்வகுப்பு வரை இந்தி பாடத்தை கட்டாயமாக்க கோரி தாக்கல் செய்தபொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாடுமுழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு வரைஇந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்அஸ்வினிகுமார் உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் பொது நலமனுஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் நீதித்துறையில் இருப்பவர்கள்கூட பெரிய அளவில் மொழிப்பிரச்சனையை சந்திக்கின்றனர், மொழிப் பிரச்சனைக்கான தீர்வுஇந்தியை கட்டாய பாடமாக்குவதாகத்தான் இருக்கும் எனகுறிப்பிட்டிருந்தார். மேலும் சகோதரத்துவம், ஒற்றுமை, தேசியஒருமைப்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக மும்மொழிகொள்கையின் அடிப்படையில் இந்தி மொழியை பள்ளிகளில்அமல்படுத்துத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம்உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்குஇன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், நாடுமுழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்ககோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துஉத்தரவிட்டுள்ளது.