FLASH NEWS : அனைத்து கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் முதல்நாள்சுமார் 100 விவசாயிகள் வரை பங்கேற்றனர். தற்போது, பிறமாநில விவசாயிகளின் ஆதரவும் தமிழக விவசாயிகளுக்குக்கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்தல், நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் போன்ற பலகோரிக்கைகளை முன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில்ஈடுபட்டு வருகின்றனர்.


மண்டை ஓடு, மண் சட்டி, தூக்குக்கயிறு உள்ளிட்டவற்றை வைத்துப்போராட்டம் நடத்திய விவசாயிகள் தங்கள் வாயில் எலிக்கறி, பாம்புக் கறியை வைத்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 22வதுநாளாகத் தொடரும் இந்தப்போராட்டத்துக்குக் கிடைத்த பலனாக,விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை உயர்நீதிமன்றமதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.


தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின்தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கை விசாரித்தஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை, “சிறு குறு விவசாயிகள்மட்டுமன்றி அனைத்து விவசாயிகளும் பெற்ற கடனைத் தள்ளுபடிசெய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


இது குறித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும்அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது போராட்டத்துக்குக்கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி