அரசு துறை இணையதளங்களை மாநிலஅரசுகள் 'அப்டேட்'செய்வதில்லை. இதனால் காலாவதியானதகவல்களே இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து இணையதளங்களை நவீனப்படுத்தி, அடிக்கடி 'அப்டேட்' செய்யவேண்டுமென, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பள்ளிக்கல்வித்துறைக்கு அனைத்துசிறப்பு அம்சங்களுடன் கூடிய தனிஇணையதளம் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட வாரியாக அனைத்து வித பள்ளிகளின்தகவல்களும் இடம்பெற உள்ளன. இதில்பள்ளிகளின் வரலாற்று சிறப்பு, விளையாட்டு சாதனை, தேர்ச்சி விகிதம், இதர சாதனைகள்,இலக்கியம் போன்றவை இடம் பெறும்.
மேலும் அதுதொடர்பான படங்கள், வீடியோதொகுப்புகளும் இருக்கும். இப்பணிகளில்முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்விஅலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பல அரசு பள்ளிகள் தனியாருக்கு இணையாகஉள்ளன. அப்பள்ளிகளின் பெருமைகள்,மாணவர்களின் சாதனைகளைஇணையதளத்தில் வெளியிடும்போது, மற்றபள்ளிகளும் மாற வாய்ப்புள்ளது. மக்களிடம்அரசு பள்ளி மீதான தவறான கண்ணோட்டம்குறையும், என்றார்.