வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் -மத்திய அரசு அறிவிப்பு. PAN எண் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு

வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண்கட்டாயம் -மத்திய அரசுஅறிவிப்பு.

PAN எண் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம்என அறிவிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார்எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. நிர்ந்தர கணக்கு எண் (பான்)பெறவும் ஆதாரை அவசியமாக்க அரசு முடிவுசெய்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண்சமர்பிக்க வேண்டியது கட்டாயாமாக்கப்பட்டுவருகிறது. ஏற்கனவே எல்பிஜி இணைப்பு, பொதுவிநியோகதிட்டம், தேசிய சமூக உதவிதிட்டங்கள், தீன் தயாள் அந்த்யோதயா யோஜனாவின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள்உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அவசியம் என்பது எனநடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல்செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கலில்இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆதார்எண்ணையும் பதிவு செய்வதன் மூலம், வரிசெலுத்துபவரின் ‌வங்கிக் கணக்கு விவரங்கள், நிதி நடவடிக்கைகளை எளிதாக‌ பின்தொடர வாய்ப்பு ஏற்படும் என மத்திய அரசு கருதுகிறது‌.


இதற்கான வருமான வரிப் படிவத்தில்தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்தநிதியாண்டு முதல் அமலுக்கு வரும் என மத்தியஅரசு வட்டார தகவல் தெரிவிக்கின்றன. மேலும்நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெறவும் ஆதாரைஅவசியமாக்க அரசு முடிவு செய்துள்ளது.வருமான வரிப் படிவத்தில் கணக்கு தாக்கல்செய்பவரின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டியது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி