நிலம் வாங்கப்போகும்போது ஏகப்பட்டகுழப்பங்கள் நமக்கு வரும். முக்கியமா, சிஎம்டிஏ(CMDA) அப்ரூவல்னு சொல்றாங்க, டிடிசிபி (DTCP) அப்ரூவல்னு சொல்றாங்க. இன்னும் சிலர்பஞ்சாயத்து அப்ரூவல் இருந்தா போதும்னுசொல்றாங்க. இதில் எதுதான் சரி?

நீங்க வாங்கப்போற நிலம் நகர எல்லைக்குள்இருந்தா அதுக்கு சிஎம்டிஏ (CMDA - Chennai Metropolitan Development Authority) அப்ரூவல்வாங்கணும். குடியிருப்புகளைக் கட்டி விற்கும்புரோமோட்டர்களிடமிருந்து நீங்கள்வாங்குவதாக இருந்தால் அவர்களுடைய லே-அவுட் வரைபடத்தைக் கேட்டு வாங்கி, அதில்சிஎம்டிஏ அப்ரூவல் நம்பர் இருக்கிறதா என்றுபாருங்கள். மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில்கட்டப்பட்டிருந்தால் அது முறையான அனுமதிபெறப்பட்டிருக்கிறதா என்பதை ஒரு வழக்கறிஞர்மூலமாகத் தெரிந்துகொள்வது அவசியம்.இரண்டு கட்டடங்களுக்கு இடையே போதுமானஇடைவெளி உள்ளதா, அரசாங்கவரைமுறைகளுக்குட்பட்டு இருக்கிறதாபோன்றவற்றைச் சரிபார்த்த பின்னரேபத்திரப்பதிவுக்குச் செல்ல வேண்டும்.
நீங்கள் வாங்கும் மனை, சென்னை மெட்ரோஎல்லைக்கு வெளியே இருந்தால் அந்த மனைக்குடிடிசிபி (DTCP - Directorate of Town & Country Planning)அப்ரூவல் பெற்றிருக்க வேண்டும். இந்தஅப்ரூவலை நீங்கள் ப்ளாட்/அபார்ட்மென்ட்வாங்கும் பில்டர் அல்லது புரோமோட்டர்கள்வாங்கியிருக்க வேண்டியது அவசியம். அந்தடிடிசிபி அப்ரூவல் எண்ணை நீங்கள் கேட்டுப்பெறுதல் வேண்டும். டிடிசிபி அப்ரூவல் பெற்றமனை உள்ள சாலையின் அகலம், பொதுமக்கள்பயன்படுத்த பூங்காக்கள் போன்றவிஷயங்களைக் கணக்கில்கொண்டே அனுமதிஅளிக்கப்பட்டிருக்கும்.
நகரத்துக்கு அப்பாற்பட்டு இருக்கும் ஒவ்வொருபகுதியும் கிராமப்புறப் பஞ்சாயத்து போன்றஉள்ளாட்சி அமைப்பின் கீழ் வரும். இவை,கிராமப்புற முன்னேற்றத்துக்காக வீடுகள் கட்டஅனுமதி கொடுத்து வந்தன. இதற்கும் டிடிசிபிஅப்ரூவல் பெற வேண்டும் என்பதுதான் விதி.முன்பு பட்டா இருந்தாலே பஞ்சாயத்து அப்ரூவல்பெற்று, வீடு கட்டலாம் என்ற ஒரு நிலை இருந்தது.புதிய கட்டுமானங்களால் கிராமப்பஞ்சாயத்துக்கு வருவாய் கிடைக்கும் என்பதால்நிறைய கட்டடங்களுக்கு அனுமதியும்அளிக்கப்பட்டது. ஆனால், இரண்டுவருடங்களுக்குள் வீடு கட்டாமல் போனால்மீண்டும் அனுமதி பெற வேண்டியது அவசியம்.
ஆனால், தற்போது முறையாக சிஎம்டிஏ அல்லதுடிடிசிபி அமைப்பிடம் அப்ரூவல் வாங்காதமனைகள், விவசாய நிலங்களை விற்கவோ,வாங்கவோ சென்னை ஐகோர்ட் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக வழக்கு நடந்துவருகிறது.

டிடிசிபி அல்லது சிஎம்டிஏ அப்ரூவல் இல்லாதமனையில் வீடு கட்டினால் சிக்கல்தான்.ஆகையால், வீடு அல்லது ப்ளாட் வாங்கும்போதுஇந்த அப்ரூவல் இருக்கிறதா என்று பார்த்துவாங்க வேண்டும். மேற்கூறிய கட்டுப்பாடுகள்மற்றும் விதிகளுக்குட்பட்டு ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்(TVH) டைட்டானியம் சிட்டி புராஜெக்ட் எனும்வீட்டுமனைகளை அளிக்கிறது.
இந்த டைட்டானியம் சிட்டி புராஜெக்ட்,தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அருகே 100 ஏக்கர்பரப்பளவில் மாபெரும் குடியிருப்பு மனைகளைக்கொண்டிருக்கிறது. 600 முதல் 2,400 சதுர அடிபரப்பளவில் இந்த வீட்டுமனைகள் ரூ.6லட்சத்திலிருந்து கிடைக்கிறது. இந்த மனைகள்சிஎம்டிஏ அப்ரூவல் பெற்றவை. இவைசாலைகளை ஒட்டியே (on-road) அமைந்துள்ளன.மேலும் பள்ளிக்கூடம், கல்லூரி, விமான நிலையம்மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகேஅமைந்துள்ளன. விரைவில் கட்டப்படவிருக்கும்வண்டலூர் புறநகர் பேருந்து நிலையத்துக்கு மிகஅருகிலும், சென்னைப் புறவழிச்சாலை ஒன்றுமற்றும் இரண்டுக்கு நடுவிலும்அமைந்திருக்கிறது. அத்துடன் தேசியநெடுஞ்சாலைகளுக்கு மிக அருகேஅமைந்துள்ளது கூடுதல் சிறப்பு!