வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் அஞ்சலக வங்கிச் சேவை

வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் அஞ்சலக வங்கிச் சேவை
அஞ்சலக வங்கிச் சேவை வசதிகள் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து வருவதால் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இந்திய அரசு நிறுவனமான அஞ்சல்துறையில் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன், மற்றுமொரு பரிணாம வளர்ச்சியாக வங்கிச் சேவை தொடக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறையில் கடந்த ஆண்டு அஞ்சலக வங்கிச் சேவைக்குப் பதிவுச் சான்றிதழைப் பெற்ற முதல் பொதுத்துறை நிறுவனமாக உள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து அஞ்சலக வங்கிப் பரிவர்த்தனைத் தொழில்நுட்ப மையமாக, சென்னை தலைமை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், இந்திய அஞ்சல் வங்கிச் சேவை நிறுவனம் எளிதாகவும், வசதியாகவும் பல்வேறு சேவைகளை அளிக்க உள்ளது. கடந்த ஓரிரு மாதங்களாக அஞ்சலக ஏடிஎம்களின் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

நாடு முழுவதும் 1.39 லட்சம் கிராமப்புற அஞ்சலகங்கள் உள்பட 1.54 லட்சம் அஞ்சலகங்கள் வங்கிச் சேவையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதற்கான முதல்கட்ட சோதனை சென்னை கிரீம்ஸ் சாலை, தாம்பரம் உள்ளிட்ட அஞ்சலகங்களில் மேற்கொள்ளப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக அஞ்சலக வங்கிப் பரிவர்த்தனை சேவை இங்குதான் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் பணம் பெறும் புதிய வசதியை விரைவில் தொடக்கவுள்ளது.

அஞ்சலக வங்கிச் சேவையை தேடி..: வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத்தொகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறைந்தால் அபராதத் தொகை வசூலிக்கப்பட உள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது அஞ்சலக வங்கிக் கணக்குத் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அஞ்சல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அஞ்சல்துறை சார்பில் வழங்கீட்டு வங்கி சேவைப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒருங்கிணைக்கப்பட்ட வங்கி சேவைத் தீர்வுகள் (இஆந: ஸ்ரீர்ழ்ங் க்ஷஹய்ந்ண்ய்ஞ் ள்ர்ப்ன்ற்ண்ர்ய்ள்) எனும் தொழில்நுட்பத்தில் வங்கி சேவைப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

12 ஆயிரம் அஞ்சலகங்களில்..: அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் விரைந்து ஏடிஎம் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக 97 அஞ்சலக ஏடிஎம்களிலும் ரூ.2,000 உள்ளிட்ட புதிய ரூபாய் நோட்டுகள் எடுப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், தமிழகத்தில் உள்ள தலைமை, துணை, கிளை உள்ளிட்ட 12 ஆயிரம் அஞ்சலகங்களிலும் புதிய வங்கி சேமிப்புக் கணக்குகள் துவங்குவது அதிகரித்து வருகின்றது.

எந்தவித அபராதத் தொகையும் இல்லை: வாடிக்கையாளர்கள் ரூ.50 செலுத்தி அஞ்சலக வங்கி சேமிப்புக் கணக்குத் தொடங்கலாம். அதுபோல், அஞ்சலக ஏடிஎம்களைக் கொண்டு அனைத்து வங்கிகளிலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்காக, குறிப்பிட்ட முறை எடுப்பது, சேமிப்பு இருப்பில் குறைந்தபட்ச தொகை வைத்திருப்பது உள்ளிட்ட எந்த வித நிபந்தனையும் வாடிக்கையாளர்களுக்கு இல்லை என்றார் அவர்.

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் திரு ரவி திரு நயினார் திரு குமார் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளோம். தொடக்கத்தில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.500 ஆக இருந்தது.

தற்போது, குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.5 ஆயிரம் என உயர்த்தி உள்ளனர். பெருநகரங்களில் குறைந்தபட்ச வருமானம் உள்ளோர் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

அதுபோல், பல்வேறு அபராதத் தொகை செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், அண்மையில் தொடங்கப்பட்டுள்ள அஞ்சலக வங்கிச் சேவை, வசதிகள் ஆகியவை அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளது. எனவே, வங்கிக் கணக்கை நிறைவு செய்து அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்குத் தொடங்கியுள்ளோம் என்றனர்.


30 நாள்களில் 15 லட்சம் வாடிக்கையாளர்கள்


பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் 2.58 கோடி அஞ்சலக சேமிப்பு கணக்குகள் இருந்தன. கடந்த 30 நாள்களில் மட்டும் 15 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் அஞ்சலக வங்கி சேவையில் இணைந்துள்ளனர்.

சிறப்பு அம்சங்கள்


அஞ்சலக சேமிப்புக் கணக்குத் தொடங்க ரூ.50 போதுமானது. காசோலை வேண்டுவோருக்கான குறைந்த பட்ச இருப்பு ரூ.500. வாடிக்கையாளர் இணைக் கணக்கு, வாரிசுதாரர் நியமன வசதிகள் உண்டு. கணக்கு தொடங்குவதற்கு எளிமையான சான்றிதழே போதுமானது.

வைப்புத்தொகைக்கு உச்சவரம்பு இல்லை. வட்டி விகிதம் 4 சதவீதம். அஞ்சலக ஏடிஎம் அட்டை மூலம், இதர வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். எந்தவொரு கட்டணமும் இல்லை. நாட்டிலுள்ள எந்த அஞ்சலகத்திலும் பணம் செலுத்தலாம்.

தொடர் வைப்புக் கணக்கு (ஆர்டி), முதியோர் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), மாதாந்திர வருமானத் திட்டம் (எம்ஐஎஸ்) உள்ளிட்ட திட்டங்களுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கிலிருந்து தாமாக பணம் பெறுவது, வழங்குவது (Auto debit-credit facility) ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன 


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி