ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை!!!

ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை!!!


'தபால் அலுவலகங்களில், 50 ரூபாய் செலுத்தி கணக்கு துவங்கினால், பாஸ் புக் மற்றும் ஏ.டி.எம்., கார்டு பெறலாம்; பணம் எடுக்க கட்டுப்பாடுகளோ, கட்டணமோ கிடையாது' என்று, தபால் துறை அறிவித்துள்ளது.

பண பரிவர்த்தனை செய்யவும், ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்கவும், வங்கிகள் விதிக்கும் அடுத்தடுத்த கட்டுப்பாடுகளால், வாடிக்கையாளர்கள் கவலைஅடைந்துள்ளனர்.

கணக்கு துவக்கலாம் : இதற்கு மாறாக, நலிவடைந்துள்ள தபால் துறையோ, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், எவ்வித சேவை கட்டணமுமின்றி, வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தர முன்வந்துள்ளது. அதன்படி, குறைந்தபட்சம், 50 ரூபாய் செலுத்தி, தபால் அலுவலகங்களில் கணக்கு துவக்கலாம்; பாஸ் புக், ஏ.டி.எம்., கார்டு பெற்று, பண பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ளும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், சேவூர் தபால் நிலைய துணை தபால் அதிகாரி சுப்ரமணியம் கூறியதாவது: தபால் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, எந்த தபால் நிலையத்திலோ, பிற வங்கி ஏ.டி.எம்.,களிலோ பணம் எடுக்கலாம்.
கட்டணம் கிடையாது : ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்; அல்லது எடுக்கலாம். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். வங்கிகளை போலவே, தபால் நிலைய சேமிப்பு கணக்குக்கு, 4 சதவீதம் வட்டி வழங்கப்படும். 'போஸ்ட் பேமென்ட் பாங்கிங்' என்ற புதிய திட்டத்தில், 4.5 சதவீதம் முதல், 5.5 சதவீதம் வரை, 'டிபாசிட்' வட்டியை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக, தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி