ஜியோ ப்ரைம் - ஏர்டெல் 349 - வோடோஃபோன் 345 - எந்த பிளான் பெஸ்ட்?


சேவைகள்ஜியோஎர்டெல்வோடோஃபோன்
  4ஜி டேட்டா1ஜிபி /நாள்1ஜிபி /நாள்1 ஜிபி /நாள்
 வேலிடிட்டி28 நாட்கள்28 நாட்கள்28 நாட்கள்
 வாய்ஸ் கால்/ குறுந்தகவல்இலவசம்300 நிமி/நாள்300 நிமி /நாள்
ரோமிங்இலவசம்இல்லைஇல்லை




ஆடிப்போய் இருக்கிறது இந்திய தொலைதொடர்பு துறை. ஜியோவின் கடந்த சில மாதங்களுக்கான இலவச சேவை, டெலிகாம் துறையையே
அதிரடித்திருக்கிறது. கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மொபைலில் கிரிக்கெட் மேட்ச்சை லைவாக பார்த்தபடியே ஓட்டுகிறார்கள். பேருந்தில் செல்லும் சீரியல் விரும்பிகள், பயணத்திலே சீரியல் பார்க்கிறார்கள். எல்லோரும் 4ஜி வேகத்தில் இணையத்தை துழாவி எடுக்கும் பழக்கத்துக்கு வந்துவிட்டார்கள். காரணம், ஜியோ.
 jio ஜியோ
இந்த மாதத்துடன் ஜியோ சொன்ன கெடு முடிகிறது. முதலில் 2016 திசம்பர் வரை இலவசம் என்றார்கள் அடுத்து, மார்ச் வரை நீடித்திருக்கிறார்கள். இப்போது ஜியோ பிரைம் திட்டம் என்கிறார்கள். அதன்படி மார்ச் 31க்குள் 99ரூபாய் கட்டினால் ஜியோ பிரைம் மெம்பர் ஆகிவிடலாம். அதன்பின் மாதம் 303 ரூபாய் கட்டினால் போதும். அளவற்ற வாய்ஸ் கால், தினம் 1ஜிபி 4ஜி நெட் 28 நாட்களுக்கு நிச்சயம். அதாவது, இப்போது இலவசமாக கிடைக்கும் சேவைகள் ஏப்ரல் 1க்கு பிறகு மாதம் 303 ரூபாய். இதுதான் ஜியோவின் நீண்டகால பிளான் என்பதால், மற்ற நிறுவனங்கள் இதை சமாளித்தாக வேண்டியிருக்கிறது.
முக்கிய எதிர்கட்சிகளான ஏர்டெல்லும்,வோடோஃபோனும் ஜியோவின் தாக்குதலால்ஏற்கெனவே நிலைகுலைந்து போயிருக்கின்றன.இனியும் விட்டால் ரெகுலர் கஸ்டமர்களும் மனம்மாறுவர்கள் என புது பிளான்களைஅறிவித்திருக்கின்றனஅவை என்ன என்ன?

ஏர்டெல் 349:

ஜியோவின் 303 திட்டத்துக்கு சரியான பதிலடிஏர்டெல்லின் 349. இந்த பிளானும் 28நாட்களுக்கானதுதான்தினமும் 1 ஜிபி 4ஜி நெட்.ஆனால்ஏர்டெல் இங்கு சின்ன செக் வைக்கிறது. 1ஜிபியில்  500 எம்பியை அதிகாலை 3 மணி முதல்மணிக்குள் பயன்படுத்த வேண்டும்.  மற்ற 500எம்.பியை எப்போது வேண்டுமென்றாலும்பயன்படுத்திக் கொள்ளலாம்கொஞ்சம் ஏமாற்றுவித்தைதான் என்றாலும்ஏர்டெல்லின் இந்ததிட்டத்துக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்லவரவேற்பு இருக்கும்இதில் வாய்ஸ் கால்களுக்குகட்டணம் கிடையாதுஆனால்ரோமிங்கில்கட்டணம் உண்டுதினமும் 1ஜிபி லிமிட் என்பதுபோல வாய்ஸ் கால்களுகும் தினமும் 300நிமிடங்கள்வாரம் 1200 நிமிடங்கள் லிமிட்வைத்திருக்கிறார்கள்அதைத் தாண்டினால்கட்டணம் உண்டுஜியோ அளவுக்கு இறங்கிஅடிக்கவில்லை என்றாலும்ஏர்டெல்லின்தற்போதைய கட்டணத்துக்கு இந்த ஆஃபர்உண்மையிலே ஜாக்பாட் தான்.

இந்த ஆபரையும் இப்போதுவரை ஏர்டெல்செக்மெண்ட்டெட் ஆபர் என்றுதான்வைத்திருக்கிறார்கள்அதாவது எல்லாவாடிக்கையாளருக்கும் இது கிடைக்காது.குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இது செல்லும்.ஆனால்விரைவில் அனைவருக்கும் இந்த ஆஃபர்கிடைத்துவிடும் என நம்பலாம்.

வோடோஃபோன் 346:

கிட்டத்தட்ட ஏர்டெல்லின் அதே கட்டணம் அதேசலுகைகள்ஆனால்வோடோஃபோன்ஏர்டெல்லை சின்ன மார்ஜினில் வெல்கிறது.வாய்ஸ் கால்களில் மாற்றம் இல்லைதினம் 300நிமிடங்கள் /வாரம் 1200 நிமிடங்கள் இலவசம்தான்டேட்டாவும் தினம் 1ஜிபி என 28 நாட்களுக்கு28 ஜிபி தான்ஆனால்அந்த ஒரு ஜிபியைபயன்படுத்துவதில் ஏர்டெல் போலவோடோஃபோன் எந்த செக்கும் வைக்கவில்லை.நாள்முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.மார்ச் 15க்குள் இந்த பிளானுக்குள்வருபவர்களுக்கு கூடுதலாக 28ஜிபியை தந்ததுவோடோஃபோன்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி