பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 2510 ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி

அனைவராலும் பிஎஸ்என்எல் என அழைக்கப்படும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் 2017 2018-ஆம் ஆண்டிற்கான 2510 ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ இணையதளமான www.externalbsnlexam.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Telecom Officer (JTO)
மொத்த காலியிடங்கள்: 2,510. இதில் தமிழகத்திற்கு 103 இடங்கள் ஓதுக்கப்பட்டுள்ளன.
பணியிடம்: இந்தியா முழுவதும்
தகுதி: பொறியியல் துறையில் டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ், வானொலி, கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல், தகவல் தொழில்நுட்பம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற துறைகளில் பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல் போன்ற துறைகளில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மற்றும் 2017 கேட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 06.04.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தேர்வு செய்யப்படும் முறை: 2017 கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.300.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.externalbsnlexam.com/documents/GATE_JTODR_Notification.pdf என்ற (PDF) லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவு

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி