பிளஸ்-2 வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 17 பேர் பிடிபட்டனர் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கருத்து


பிளஸ்-2 வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 17 பேர் பிடிபட்டனர் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கருத்து

பிளஸ்-2 வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 17 பேர் பிடிபட்டனர் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கருத்து | பிளஸ்-2 வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 17 பேர் பிடிபட்டனர். கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். பிளஸ்-2 வேதியியல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று வேதியியல் மற்றும் அக்கவுண்டன்சி தேர்வுகள் நடைபெற்றன. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வந்த கிரெசன்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் மகரிஷி வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு குறித்து கூறியதாவது:- கேள்விகள் கடினம் 1 மதிப்பெண் கேள்விகளில் சில பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டு இருந்தன. பெரும்பாலானவர்கள் பாடத்திற்கு பின்புறத்தில் கொடுக்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலைத்தான் படித்து இருப்பார்கள். அதுபோலத்தான் நாங்களும் படித்தோம். அதன் காரணமாக அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க சற்று கடினமாக இருந்தது. மேலும் 3 மதிப்பெண் கேள்வி நீண்ட அளவில் பதில் அளிக்கும் வகையில் இருந்தது. 5 மதிப்பெண் கேள்விகளும் பெரிய அளவில் பதில் அளிக்க வேண்டி இருந்தது. அதன் காரணமாக விடை எழுத நேரம் போதாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். வேதியியல் ஆசிரியை ஒருவர் கூறுகையில், '3 மதிப்பெண் கேள்விகள் நீண்ட அளவில் பதில் அளிக்கும் வகையில் உள்ளது'என்றார். 17 பேர் பிடிபட்டனர் நேற்று நடந்த தேர்வுகளில் காப்பி அடித்ததாக 25 பேர் பிடிபட்டனர். அவர்களில் 14 பேர் பள்ளிக்கூட மாணவர்கள். 11 பேர் தனித்தேர்வர்கள். வேதியியல் தேர்வில் 17 பேரும், அக்கவுண்டன்சி தேர்வில் 8 பேரும் பிடிபட்டனர். அதாவது திருச்சி மாவட்டத்தில் 5 மாணவர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் 4 மாணவர்கள், திருவள்ளூர், சேலம், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும் காப்பி அடித்ததாக பிடிபட்டனர். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தலா 4 தனித்தேர்வர்களும், சென்னை மாவட்டத்தில் 3 தனித்தேர்வர்களும் பிடிபட்டனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி