பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் அஞ்சல்துறை...

பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் அஞ்சல்துறை...

கடந்த 2015 மே 9-ம் தேதி இந்திய பிரதமர் , ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ என்ற விபத்துக்கான காப்பீட்டுத் திட்டத்தையும், ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையும் தொடங்கிவைத்தார்.ரூ 2 லட்சம் காப்பீடு கொண்ட பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் *18 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் மாதம் ரூ.1 வீதம், வருடத்துக்கு ரூ.12 பிரீமியம் செலுத்த வேண்டும். 

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள், *ஆண்டுக்கு ரூ.330 பிரீமியமாக செலுத்த வேண்டும*். இரு காப்பீட்டுத் திட்டத்திலும் முறையே ரூ.2 லட்சம் வரை காப்பீடு பெற முடியும்.


இந்த காப்பீட்டுத் திட்டங்களுக்கான பிரீமியம் தொகையை எளிதாக செலுத்துவதற்காக சுரக்ஷா என்ற வைப்புத் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. அதன் படி, ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ என்ற விபத்து காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் 12 ரூபாயை செலுத்த ரூ.201 வைப் புத் தொகையாகவும், ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்ற ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் 330 ரூபாயை செலுத்த ரூ.5,001 வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இந்த வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டு பிரீமியத் தொகை செலுத்த வழிவகை ஏற்படுத்துப்பட்டுள்ளது.

*அஞ்சலங்களில் சாதாரண சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.* இதற்கான விண்ணப்பத்தையும் அந்தந்த அஞ்சலக கிளைகளில் பெற்று வாடிக்கையாளர்கள் செலுத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

ஆனால் பெரும்பாலான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கிராமப்புற வங்கிகளிலும் இந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. இந்த காப்பீட்டுத் திட்டங்கள் பற்றி வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வங்கி நிர்வாகங்கள் முன்வருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும், சில வங்கிகளில் இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியாமல் பல அதிகாரிகள் இருக்கின்றனர். “இது நல்ல திட்டம், ஒருசில வங்கிகளைத் தவிர பெரும்பாலான வங்கிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. தனியார் வங்கிகள் இதுகுறித்து பேசுவதே கிடையாது. இந்தத் திட்டம் இப் போதும் செயல்பாட்டில் இருப்பதால், இந்தத் திட்டத்தில் ஒவ் வொருவரும் சேர்வது அவசியம்”

*இத்திட்டத்தில் இணைய உடனே அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகவும்*

குறிப்பு:
1.தற்போது அஞ்சலக சேமிப்பு கணக்குதாரர்களுக்கு *ATM வசதியும்* செய்யப்பட்டுள்ளது.

2. மாதம் ரூ.1000/2000/3000/4000/5000 *ஓய்வூதியம் (Pension)*பெறும் அடல் பென்சன் யோஜ்னா (APY) என்ற திட்டமும் அஞ்சலகத்தில் உள்ளது. 18 வயதுமுதல் 40 வயது உள்ளவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி