இதனால் தான் இது 2016 ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்


கடந்த 2016 ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போனாக வெற்றி பெற்றிருக்கிறது ஜியோமியின் ரெட்மி நோட் 3 ஸ்மார்ட்போன். ஒவ்வொரு வருடத்தின் கடைசியில் இணையதளங்கள் பல அந்த வருடத்தின் சிறந்த ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுத்து அறிவிக்கும் அதில் கடந்த ஆண்டு பெரும்பாலான இணையதளங்களின் தேர்வு ரெட்மி நோட் 3
.

இந்திய மொபைல் சந்தைகளில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் அதிகம் அதற்கேற்ப மொபைல் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகம் உலகிலேயே அதிகமாக ஸ்மார்ட்போன் பயண்படுத்தும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஒரு நிறுவனம் மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்றவாறு ஸ்மார்ட்போன்களை தயாரிப்பது என்பது சாதாரணமாக இருக்காது.


அப்படி தேவையை அறிந்து, அதிக வசதிகளுடன், தரமான ஸ்மார்ட்போனை சரியான விலையில் அறிமுகப்படுத்தியது ஜியோமி. இதனால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து செப்டம்பர் வரை 2.3 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் என்று சாதனை படைத்தது.

இதே செக்மென்டில் மற்ற மொபைல் நிறுனங்களும் ஸ்மார்ட்போன் இருந்தாலும் புதிதாக அறிமுகப்படுத்தினாலும் ஜியோமி ரெட்மி நோட் 3 மட்டும் ஏன் வெற்றி பெற்றது என்று பார்க்கலாம்..

இதே செக்மன்டில் Redmi note 3யுடன் போட்டியிடும் மற்ற ஸ்மார்ட்போன்கள்.LeEco Le 2,Moto G4,Lenovo vibe k5,Coolpad Note 5.

ஸ்கிரீன்ஐந்து மொபைல்களையும் பொறுத்தவரை அனைத்துமே 5.5 FHD (1080 x 1920 pixels) திரையை கொண்டுள்ளன,மற்ற நான்கு ஸ்கிரீன் 401 ppi ஆகும் ஆனால் ரெட்மியில் 403 ppi உள்ளதால் இது மற்ற போன்களை விடவும் தெளிவான படங்களை தரும்.
பேட்டரி
LeEco Le 2-3000 mAh 

Coolpad Note 5 -4010 mAh

Motorola Moto G4- 3000 mAh

Lenovo K5 Note-3500 mAh

Xiaomi Redmi Note 3-4050 mAh


இன்றைய காலகட்டத்தில் ஒரு ஸ்மார்ட்போனின் முக்கிய தேவை பேட்டரி தான். ஜியோமி மற்ற மொபைல்களை விட அதிகமான பேட்டரி திறனை கொண்டுள்ளதால் ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

கேமரா

LeEco Le 2-16 MP, f/2.0, PDAF,முன்புறம் 8 MP, f/2.2

Coolpad Note 5 -13 MP, f/2.2,AF,முன்புறம் 8 MP, f/2.2,

Motorola Moto G4-13 MP, f/2.0,AFமுன்புறம் 5 MP, f/2.2

Lenovo K5 Note-13 MP, f/2.2,PDAF முன்புறம் 5 MP, f/2.2
Xiaomi Redmi Note 3-16 MP, f/2.0,PDAF முன்புறம் 5 MP, f/2.0
ஸ்மார்ட்போன்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வசதி, கேமராவின் தரம், மற்ற மொபைல்களை விட ஜியோமியில் கூடுதலாக உள்ளது. மற்ற மொபைல்களின் கேமரா குவாலிட்டி இதைவிட குறைவுதான்.
பிராசசர் மற்றும் ரேம்
LeEco Le 2- 1.8GHz octa-core Qualcomm Snapdragon 652
Coolpad Note 5 -1.5GHz octa-core Qualcomm Snapdragon 617
Motorola Moto G4-1.5GHz octa-core
Qualcomm Snapdragon 617
Lenovo K5 Note-1.8GHz octa-core
MediaTek Helio P10
Xiaomi Redmi Note 3-1.4GHz hexa-core    Qualcomm Snapdragon 650


ஒரு ஸ்மார்ட்போனின் அனைத்து செயல்பாடுகளும் அதன் வேகமும் அதில் பயன்படுத்தப்படும் பிராசசர் மற்றும் ரேமை பொறுத்தே அமையும் இதில் ஜியோமியில் Hexa core பிராசசர் மற்றும் 3 ஜிபி ரேம் உள்ளதால் மற்ற போன்களை விடவும் வேகமாக செயல்படும்.

இவ்வளவு வசதிகள் இருந்தாலும் ரெட்மி நோட் 3 ல் உள்ள ஒரே குறை ஹைபிரிட் சிம் வசதிதான் இதில் ஒரே நேரத்தில் இரண்டு சிம்கார்டுகளை பயன்படுத்தினால் மெமரி கார்டை பயண்படுத்த முடியாது என்பது மட்டுமே குறையாகும்.ஆனால் அந்த குறையை போக்கும் வகையில் 32 ஜிபி இன்டர்னல் மெமரி இதில் உள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி