எம்.ஜி.ஆர்., நினைவு தபால் தலை வெளியீடு:
சென்னை: எம்.ஜி.ஆர்., 100வது பிறந்த நாளை முன்னிட்டு, எம்.ஜி.ஆர்., நினைவு சிறப்பு தபால் தலை மற்றும் தபால் உறை வெளியிடப்பட்டது. இந்த விழா, 15 நிமிடங்களில் முடிந்தது.

அ.தி.மு.க., நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான, எம்.ஜி.ஆரின், 100வது பிறந்த நாள், நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி, எம்.ஜி.ஆர்., நினைவு சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயம் வெளியிட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம், கடிதம் எழுதினார்.

அதைத் தொடர்ந்து, மத்திய அரசு, எம்.ஜி.ஆர்., நினைவு சிறப்பு தபால் தலை வெளியிட, நடவடிக்கை மேற்கொண்டது. எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான நேற்று, எம்.ஜி.ஆர்., நினைவு சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழா, சென்னை, கிண்டியில் உள்ள, தமிழ்நாடு,டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில் நடந்தது.

முதல்வர் பன்னீர்செல்வம், காலை, 8:40 மணிக்கு, அங்கு சென்றார். எம்.ஜி.ஆர்., சிலைக்கு கீழ், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, எம்.ஜி.ஆர்., படத்திற்கு, மலர் துாவி, மரியாதை செலுத்தினார்.

பின், எம்.ஜி.ஆர்., சிறப்பு தபால் தலை மற்றும் தபால் உறையை, தபால் துறை தலைமை இயக்குனர், மூர்த்தி வெளியிட்டார். அதை, முதல்வர் பன்னீர்செல்வம் பெற்று கொண்டார். நிகழ்ச்சி, 15 நிமிடங்களில் முடிந்தது.


எம்.ஜி.ஆர்., புகழ் பாட நேரமில்லை

எம்.ஜி.ஆர்., நினைவு சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழாவில், நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டும், எம்.ஜி.ஆரின் சிறப்புகளை பட்டியலிட்டார். எம்.ஜி.ஆர்., துவக்கிய கட்சியில் உள்ள, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாரும், அவரது புகழை பற்றி பேசவில்லை. சசிகலா பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்பதால், நேரமில்லை என, 15 நிமிடங்களில் விழாவை முடித்து, பறந்தனர்.

தபால் தலை ரூ.11

எம்.ஜி.ஆர்., உருவப்படம் பொறித்த, எம்.ஜி.ஆர்., நினைவு தபால் தலை, 11 ரூபாய்க்கும், தபால் உறை, 15 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது.Source : http://www.dinamalar.com/news_detail.asp?id=1692545

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி