வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தும்கூட ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கும் வியாபாரிகள்

வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தும்கூட ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கும் வியாபாரிகள்

10 ரூபாய் நாணயங்கள்செல்லும் என வங்கிஅதிகாரிகள் பலமுறை விளக்கமளித்தும்கூட வியாபாரிகள், பேருந்து நடத்துநர்கள்நாணயங்களை தொடர்ந்து வாங்கமறுப்பதால் பொதுமக்கள்மிகுந்த சிரமத்துக்குஆளாகின்றனர்.

மத்திய அரசின் ரூ. 500, ரூ. 1000 பண மதிப்பு நீக்க நடவடிக்கையால்மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். வங்கிகளிலும், ஏ.டி.எம்.மையங்களிலும் காத்துக்கிடந்து பழைய நோட் டுகளை மாற்றினர். அதேவேளையில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டவங்கிகள் 10 ரூபாய் நாணயங்களையும் புதிதாக வெளியிட்டன. இதனால் 10 ரூபாய் நாணயங்களின் எண்ணிக்கை முன்புஇருந்ததைவிட அதிகளவில் புழக்கத்துக்கு வந்தன. ஆனால் 10 ரூபாய்நாணயங்களும் மதிப்பு நீக்கப்பட்டதாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்வதந்தி பரவியது. இதனால் கடைகளில் நாண யங்களை வாங்கவியாபாரிகள் மறுத்துவிட்டனர். பேருந்து ஓட்டு நர்களும்பயணிகளிடம் வாங்க மறுத்தனர். இத்தகவல் வெறும் புரளிதான். நாணயங்களை வியாபாரிகள் தாராளமாக வாங்கிக்கொள்ளலாம் எனவங்கி அதிகாரிகள் பலமுறை விளக்கம் அளித்தும் கூடநாணயங்களை வாங்க மறுப்பது இன்றுவரை தொடர்கிறது.

இதுகுறித்து மதுரை டவுன்ஹால் ரோட்டை சேர்ந்த வியாபாரிமுகம்மது காதர் கூறியது: மதுரையில் உள்ள தேநீர் கடை, காய்கறிக்கடை உள்ளிட்ட பெரும்பாலான கடைகளில் 10 ரூபாய் நாணயங்களைவாங்க மறுக்கின்றனர். வங்கி அதிகாரிகள் செல்லும் என பலமுறைவிளக்க மளித்துவிட்டனர். ஆனாலும், 10 ரூபாய் நாணயங்களைவாங்க மறுப்பது அரசை அவமா னப்படுத்துவது போன்றதாகும். எனவே நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றார். வாடிப்பட்டி அருகே உள்ள மேலக்கால்கிராமத்தை சேர்ந்த நாகசாமி கூறியது: 10 ரூபாய் நாணயங்களைகடைகளில் வாங்க வியாபாரிகள் மறுக்கின்றனர். வங்கிகளிலும்கூடநோட்டை மட்டுமே கொடுக்குமாறு கூறி, நாணயங்களை வாங்கஅதிகாரிகள் மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும்சிரமமடைகின்றனர் என்றார்.




இதுதொடர்பாக பேருந்து நடத்துநர்கள் கூறியது: பயணி களிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்க நாங்கள் தயாராக உள்ளோம்.






ஆனால், ஒருவர் கொடுத்த நாணயத்தை மற்றவரிடம் கொடுத்தால்அவர்கள் வாங்க மறுக்கின்றனர். போக்குவரத்து பணிமனைகளிலும்பெருமளவில் நாணயங்கள் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுமாறுகூறுகின்றனர் என தெரிவித்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி