எம்பாமிங் - Enbalming ஒரு குறிப்பு

எம்பாமிங் - Enbalming ஒரு குறிப்பு

பிணச்சீரமைப்பு (Embalming) என்பது பிணத்தை அதன் உருக்குலையாதவாறு பாதுகாக்கும் ஒர் மருத்துவக் கலை 17ம் நூற்றாண்டில் வில்லியம் ஹார்வே என்பவர் இக்கலையை கண்டு பிடித்தார்.வில்லியம் ஹண்டர் என்பவர் இக்கலையை முதன் முதலாக இறந்தவனுக்கு பயன் படுத்தி இதன் பயன் பாடுகளை விளக்கினார். இவர்களுக்கு முன்னர் இறந்தவரின் பிரேதத்தை கிழித்து அதனுள் இருக்கும் உடல் உறுப்புகளை பார்த்து வரைந்து வகைக்கவும் அதன் வேலைகளை அறிய அதன் பாகங்களை குறிக்கவும் பிரேத ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் லியனார்டோ டாவின்சி ஆவார்.

அவரது படக்குறிப்புகள் பிற்காலத்தில் மருத்துவத்துறைக்கு பெரிதும் உதவின, அதுபோல ஆங்கில ஹாரர் படங்களான Frankenstein படங்களுக்கும் அது இன்ஸ்பிரேசனாக இருந்தது. நமது நாட்டில் கல்லூரிகள், உயிரியல் சோதனைக்கூடங்கள், ஏன் பொருட்காட்சிகளில் உயிரியல் அரங்கங்களில் நாம் கண்டிருப்போம், வித்தியாசமான உருவத்திலான அல்லது வளர்ச்சி குறைந்த உடலுடன் கூடிய குழந்தைகள், மனித உடல் உறுப்புகளான இருதயம், ஈரல், கண்கள் ஆகியவற்றை ஒரு பெரிய கண்ணாடி ஜாடியில் நீர் நிரைந்து அமிழ்த்தி வைத்திருப்பார்கள்..அவை அனைத்தும் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் ஒன்று, அதில் நிரம்பியுள்ள எத்தனாலும் ரசாயன கலவைகளுமே நமது உடலில் எம்பாமிங் செய்ய பயன்படுகிறது

இந்தக் கலையை அமெரிக்க போரில் இறந்து போகும் வீரர்களை அவர்கள் குடும்பத்தினர் பார்ப்பதற்காக வீரர்களை Embalm செய்து அனுப்புவதை வழக்கமாக கொண்டது . .இந்த பிணச் சீரமைப்பு கலை என்பது உடலினுள் ஃபார்மால்டிஹைடு, குளுட்டரால்டிஹைடு, மெத்தனால், போன்ற கெமிக்கல் கலந்த கலவை உடலினுள் செலுத்தப்பட்டு உடலை பாதுகாப்பது. 

இந்த கெமிக்கல்ஸ் தேவைக்கு ஏற்ப அளவு விகிதங்களில் மாறுபடும் Arterial embalming;Cavity embalming;Hypodermic embalming,Surface embalming போன்ற நான்கு முறைகளில் embalming செய்யப் படுகிறது . இதில் surface பதனிடுதல் என்பது தோலின் மேற்பரப்பில் ரசாயனக் கலவையை செலுத்தி பதனிடும் முறை இந்த சீரமைப்பில் மிக முக்கியமான சீரமைப்பு முக சீரமைப்பு , இறந்தவரின் முகம் உயிரோடு இருக்கும் புகைப்படத்தை வைத்துக் கொண்டு , கண் உள்ளே சிறிய கண் மேட்டிற்காக தொப்பி போன்ற ஒன்றை வைத்து சரி செய்வார்கள் .

பின் ஈறுகளை இழுத்து தைத்து தாடையை சரி செய்து , உதடுகளில் ஈரப்பதம் இருக்க ரசாயன கலவையை செலுத்தி , முடிந்த வரை இறந்தவர் தூங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்கி விடுவார்கள் . அதன் பின் பின் முகத்தில் தோலின் மேலே ரசாயன கழவியை செலுத்தி, தோலின் மேல்பாகம் மரணத்தினால் ஏற்பட்ட சுருக்கங்கள் இல்லாமல் புத்துணர்வுடன் இருப்பது போல் தயார் செய்வார்கள் .

பிண சீரமைப்பு முடிந்தவுடன் உடல் முழுவதும் தோலுக்கு பயன் படுத்தும் அழகுசாதன கீரிம்களை வைத்து மசாஜ் செய்து உடலின் தோல் புத்துணர்வுடன் இருக்குமாறு தயார் செய்வார்கள் அதன் பிறகு புருவம் திருத்த பட்டு , தலை வாரப்பட்டு , முகத்திற்கு அவர்கள் வழக்கமாக இடும் மேக்கப்களை செய்து, அவர்கள் விரும்பி அணியும் ஆடை அணிவித்து அழகு செய்வார்கள் ( எம்ஜிஆர் கூட அவருக்கு பிடித்த உடை,அணிகலன்களோடு மேக்கப்பில் தான் அடக்கம் செய்யப்பட்டார் )

சாதாரண சீரமைப்பிற்கு ஒருமணி நேரம் போதும் . ஆனால் நீண்ட நாட்கள் உடல் புதிதாக இருக்க வேண்டும் என்றால் , மிகவும் நேரம் எடுத்து செய்யவார்க்ள அதற்கு 12 மணி நேரம் கூட ஆகலாம் . இப்படி தயார் செய்த உடலை சாதாரணமாக ஆறுமாதம் முதல் இரண்டு வருடம் வரையிலும் கூட புத்துணர்வுடன் வைத்து பாதுகாக்க முடியும்.

இதுபோல் embalm ஸ்செய்யப்பட பிரபலங்களில் குறிப்பிடத்தக்க சிலர் என்றால் , ஆபிரஹாம் லிங்கன் , போப் ஜான் ,டயானா சார்லஸ் , இந்த நவீன மருத்துவ அறிவியல் கண்டு பிடிப்பிற்கு முன்னதாகவே ,(1017-1137) ல் ராமானுஜர் உடல் சீரமைக்கப்பட்டு இன்று வரை ஸ்ரீரங்கத்தில் பாதுகாக்க படுகிறது . பிண சீரமைப்பு என்பது வேறு , பதப்படுத்துதல் என்பது வேறு . 

பதப்படுத்தும் முறையில் உடலின் உள்ளுறுப்பு அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டு எலும்புடன் கூடிய சரீரத்தின் சதையை தோலோடு வைத்து தைத்து உடலை பதப்படுத்துவார்கள் இதையே ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து எகிப்தில் ராஜாக்கள், ராணிகள், அவர்களது வாரிகளுக்கு செய்த மம்மி முறையாகும். Mummifying என்பது Embalming என்பதும் வேறு வேறாகும்.

மியூசியத்தில் வைத்திருக்கும் பொம்மைகள் பதப்படுத்துதல் . அது வெறும் தோலை வைத்துக் கொண்டு உள்ளே வேறு பொருட்களை வைத்து வடிவம் செய்வது . சீரமைப்பு என்பது , ரத்த நாளங்களில் ரசாயன கலவையை செலுத்தி உடலை புதிதாக மாற்றுவது . இளவரசி டயானா கார் விபத்தில் முகம் முழுவதும் நசுங்கிய நிலையில் தான் கண்டெடுக்க பட்டார் . 

அமெரிக்கா , கனடா லண்டன்போன்ற நாடுகளில் ஒவ்வொரு மரணமும் இந்த கலையில் அழகு படுத்தப் படுகிறது . இந்தியாவிலும் இது நடைமுறையில் இருந்தாலும் , சமீப காலங்களில் இந்த முறை அதிகரித்து உள்ளது . 

சோவியத் ரஷ்ய அதிபர் விளாடிமிர் லெனின் உடலும் கூட மிக அதி நவீன முறையின் 1924 ல் இருந்து எம்பாமிங் செய்து சீரமைக்கப்பட்டிருந்த்து, 2011 ல் சோசலிச கட்சிகள் சிலவால் லெனின் உடலை புதைக்கலாமா வேண்டாமா என மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி பிறகு 2012 ல் புதைத்தார்கள்.

லெனின் மட்டுமல்ல உலகில் இஸ்லாமிய நாடுகள் தவிர்த்த அனைத்து நாடுகளிலும் இந்த முறை சர்வசாதாரண மக்களாலும் கடைபிடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. கிறுஸ்தவ நாடுகளில் இறந்தவர் உடலை Funeral House என்னும் இல்லங்களில் ஒரு வாரத்திற்கு வைத்து பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு பின் 7 வது நாள் அடக்கம் செய்வது வழக்கத்தில் உள்ளது. இதனால் இந்த எம்பாமிங் முறை நமக்கு புதியதாக தோன்றலாம். 

மேற்கத்திய நாடுகளை போலவே சீனா,ஜப்பான்,கொரியா போன்ற கிழக்காசிய நாடுகளும் தற்காலம் அதிக அளவில் கிறுஸ்தவ மதத்தை தழுவிக்கொண்டதால் புரூஸ்லி முதல் மைக்கேல் ஜாக்சன் வரையிலும் இது நடத்தப்படாத நடிகர்களும் அரசியல் தலைவர்களும் உலகில் இல்லை.

அமெரிக்காவில் இதற்கான கட்டணம் 500 அமெரிக்க டாலரில் இருந்து 1500 டாலர் வரை சீரமைப்பின் தேவைக்கு ஏற்ப வசூலிக்கிறார்கள்.


மிக முக்கியமான விஷயம் பிண சீரமைப்பு உடலில் இருக்கும் ரசாயனக் கலவைகள் , காற்றில் தங்கி விடும் என்பதால் பிண சீரமைப்பு செய்த உடல்களை எரிக்க அனுமதிப்பதில்லை .

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி