பண பரிவர்த்தனை செய்வது எப்படி?
பாரத பிரதமர் நரேந்திர மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த ஒரே ஒரு அறிவிப்பால் இந்தியர்களின் வாழ்க்கை முறையே கிட்டத்தட்ட மாறிவிட்டது. ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் கூட டிஜிட்டலுக்கு மாறி வருகின்றனர்.
ஸ்வைப் மிஷினுக்கு வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் சின்ன சின்ன மளிகைக்கடை, பெட்டி கடைகளில் கூட ஸ்வைப் மிஷின் வந்துவிட்டது. இண்டர்நெட், ஸ்மார்ட்போன் இன்றி பேடிம் அணுகல் : டோல்-ப்ரீ எண் அறிமுகம்..! பிரதமரின் டிஜிட்டல் கனவை நிறைவேற்ற பலர் ஆன்லைன் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஆகியவற்றை நாடி வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரிடமும் கம்ப்யூட்டரோ, ஸ்மார்ட்போனோ இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. அதேபோல் இண்டர்நெட் பயன்பாடும் கிராமத்தில் குறைவுதான்.
இந்நிலையில் கிராமத்தினர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற உதவுவதுதான் USSD (Unstructured Supplementary Service Data ) என்ற முறை. இந்த USSD மூலம் ஆஃப்லைனில் சாதாரண போனில் இருந்து கூட பண பரிவர்த்தனை செய்வது எப்படி என்பதை பார்ப்போம்
USSD வங்கி பரிவர்த்தனைக்கு முதல் தேவை என்ன? SSD மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைல் எண்ணை உங்கள் வங்கியில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். ரிஜிஸ்டர் செய்து முடித்த பின்னர் MMID எண்ணை நீங்கள் வங்கியிடம் இருந்து பெற்று கொள்ள வேண்டும். இந்த MMID எண்ணை எஸ்.எம்.எஸ் அனுப்பியோ அல்லது இண்டர்நெட் மூலமோ நீங்கள் பெற்று கொள்ளலாம். MMID எண்ணுடன் உங்களுக்கு தேவையான மற்றொன்று MPIN எண். வங்கியில் இருந்து தரப்படும் இந்த MMID எண்ணை பின்னர் நீங்கள் மாற்றி கொள்ளலாம். ஓகே. இப்போது நீங்கள் MMID மற்றும் MPIN எண்களை கைகளில் வைத்துள்ளீர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.,முதலில் நீங்கள் செய்ய வேண்டியது டயலர் ஆப்-ஐ மொபைல் பொனில் ஓபன் செய்ய வேண்டும். அதில் *99# என்று டயல் செய்து உங்கள் வங்கியின் பெயரில் முதல் மூன்று எழுத்தை டயல் செய்யவும். அதாவது நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ICICI என்றால் ICI என்று டைப் செய்யவும். அல்லது அந்த வங்கியின் IFSC எண்ணை டை செய்யவும். இதன் பின்னர் உங்களுடைய போன் எண் சோதனை செய்யப்பட்டு உங்களுக்கு பாப்-அப் ஒன்று தோன்றும். அதில் வங்கியில் உள்ள பேலன்ஸ், மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் பணப்பரிவர்த்தனைக்கான ஆப்சன் இருக்கும். உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸை செக் செய்ய 1ஐ அழுத்த வேண்டும். மினி ஸ்டேட்மெண்ட் தேவை என்றால் 2ஐ அழுத்தவும் USSD மூலம் பணத்தை அனுப்புவது இப்படித்தான் 1, 2, ஐ அழுத்தினால் பேலன்ஸ் மற்றும் ஸ்டேட்மெண்ட் வருவது போன்று பணத்தை அனுப்ப 3ஐ அழுத்த வேண்டும். இதன் பின்னர் நீங்கள் யாருக்கு பணத்தை அனுப்ப வேண்டுமோ அந்த நபரின் மொபைல் எண் மற்றும் அந்த நபரின் MPIN எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் நீங்கள் அனுப்ப வேண்டிய தொகை மற்றும் குறிப்புகள் ஏதாவது இருந்தால் அதையும் பதிவு செய்ய வேண்டும். கடைசியாக உங்களுடைய MPIN எண்ணை டைப் செய்தால் போதும், நீங்கள் அனுப்பிய பணம் சம்பந்தப்பட்ட நபருக்கு சென்றுவிடும்எதில் கவனமாக இருக்க வேண்டும்? இந்த பிராசஸின்போது பாப் அப் தோன்றிய 10 வினாடிகளுக்கு நீங்கள் உங்களுடைய MPIN எண்ணை பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் இந்த பிராசஸ் கேன்சல் ஆகிவிடும். பின்னர் நீங்கள் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.USSD எத்தனை மொழிகளில் செயல்படும் பொதுவாக இந்த பண பரிவர்த்தனையை கிராமத்தினர் மட்டுமே உபயோகிப்பதால் அவர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்காது. எனவே இந்த முறை 11 மொழிகளில் செயல்படுகிறது. இந்தி (*99*22#), மராத்தி (*99*28#), பெங்காலி (*99*29#), பஞ்சாபி (*99*30#), கன்னடம் (*99*26#), குஜராத்தி (*99*27#), தமிழ், (*99*23#), தெலுங்கு (*99*24#), மலையாளம் (*99*25#), ஒரியா (*99*32#) மற்றும் அஸ்ஸாமி (*99*31#) என அந்தந்த மொழிகளுக்கு ஏற்ற கோட் எண்களை பயன்படுத்தவும்எவ்வளவு அனுப்பலாம்? இதற்கு எவ்வளவு சேவைக் கட்டணம்? இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி இந்த USSD முறையில் நாள் ஒன்றுக்கு ரூ.1 முதல் ரூ.5000 வரை அனுப்பலாம். ஒருமுறை பணம் அனுப்புவதற்கு 50 காசுகள் மட்டுமே சேவைக்கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. அதுகூட வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை பண தட்டுப்பாடு காரணமாக இலவசமாகியுள்ளது.