பள்ளிப் பருவத்தில் சிறந்த மாணவி ஜெயலலிதா.. பிஷப் காட்டன் பள்ளி முதல்வர் பெருமிதம் !


பள்ளிப் பருவத்தில் சிறந்த மாணவி ஜெயலலிதா.. பிஷப் காட்டன் பள்ளி முதல்வர் பெருமிதம் !


பெங்களூர்: மறைந்த ஜெயலலிதா பள்ளிப் பருவத்தில் சிறந்தமாணவியாகவும், நல்ல தடகள வீராங்கனையாகவும் திகழ்ந்தவர்என்று அவர் படித்த பெங்களூர் பிஷப் காட்டன் பள்ளியின் முதல்வர்லாவண்யா மித்திரன் கூறியுள்ளார். கடந்த 1948 பிப்ரவரி 24-ல்மைசூரில் பிறந்தார்ஜெயலலிதா. தனது இரண்டு வயதில் தந்தையை இழந்தார். பின்னர்அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்தபெங்களூருக்குச் சென்றார். 1952 முதல் 1958 -ம் ஆண்டு வரைபெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்படித்தார். இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு அவர் பயின்றபிஷப் காட்டன் பள்ளியில் இன்று காலை இரண்டு நிமிடம் மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் மறைவு குறித்து பிஷப் பள்ளியின் முதல்வர்லாவண்யா மித்திரன் கூறுகையில், மறைந்த ஜெயலலிதா இந்தபள்ளியில் தான் ஆரம்ப கல்வி பயின்றார். பள்ளியில் படித்த போதுமிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா, படிப்புமட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்த மாணவியாக விளங்கினார். பின்னாளில் அவர் முதல்வராக பதவியேற்ற போது அந்த விழாவில்இரண்டு முறை கலந்துகொண்டேன் என நினைவு கூறினார். மேலும்ஜெயலலிதா நான்காம் வகுப்பு படித்த போது சக மாணிவிகள், ஆசிரியருடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி