உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர் நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அதன் பின்னர் நீதிபதி ஜே.எஸ்.கெஹர் ஜனவரி 4,2017 அன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அவர் ஜனவரி 4-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி 2017- வரை அந்த பதவியில் நீடிப்பார். இவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் முதல் சீக்கியர் ஆவார். புதிய உச்சநீதிமன்ற 44 வது தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் என்பது குறிப்பிடத்தக்கது