வங்கிகளில் அதிகம் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமானவரித்துறை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி வருகிறது. நாடுமுழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர், தனிநபர்களும் வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். இதனால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையே ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்களின் விவரங்கள் கண்காணிக்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் வங்கிகளில் பெரும் தொகையை டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித் துறையினரிடமிருந்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.