மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதமாக உயர்த்தப்பட்டதற்கு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

தமிழகத்தில் மகப்பேறு விடுப்பு காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அரசு ஊழியர்களின் 9 மாதபேறுகால விடுப்புக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது.

அதில் பேறுகால விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக அதிகரிகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந் சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், தமிழகத்தில் மகப்பேறு விடுப்பு காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்துவதாக தெரிவித்திருந்தார். சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை வாசித்த ஜெயலலிதா மருத்துவ துறையில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டார். குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் தமிழகம் சாதனை படைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, தமிழக அரசு வேலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு காலம் 6 மாதங்களில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படும் என்பது முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புகளில் முக்கியமானது. மகப்பேறு விடுப்பை 6 மாதங்களாக உயர்த்தும் சட்டதிருத்தம் மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.





Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி