வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட கருப்பு பணத்துக்கு 50 சதவீதம் வரி 4 ஆண்டுகளுக்கு பணத்தை எடுக்க முடியாது

வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட கருப்பு பணத்துக்கு 50 சதவீதம் வரி 4 ஆண்டுகளுக்குபணத்தை எடுக்க முடியாது | வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட கருப்பு பணத்துக்கு 50 சதவீதம் வருமான வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த பணத்தை 4 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது.
200 சதவீத அபராதம் கிடையாது செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு, நவம்பர் 10-ந்தேதி முதல் டிசம்பர் 30-ந் தேதிவரை வங்கிகளில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட டெபாசிட்டுகளுக்குகணக்கு கேட்கப்படும் என்றும், அது திருப்தியாக இல்லாவிட்டால், கருப்பு பணமாககருதப்பட்டு, வரியுடன் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால், பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள், அவற்றை வங்கியில் செலுத்த பயந்து, தீவைத்தும், கிழித்தும்அழித்து வருகிறார்கள். ஆகவே, 200 சதவீத அபராதம் விதிக்கும் முடிவை மத்திய அரசுகைவிட்டுள்ளது. 200 சதவீத அபராதம் விதிப்பதற்கு சட்ட அங்கீகாரம் கிடைக்காதுஎன்பதும் இதற்கு ஒரு காரணம். அதே சமயத்தில், செல்லாத நோட்டுகள் அனைத்தும்வீணடிக்கப்படாமல் வங்கியில் செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசுவிரும்புகிறது. அதில், கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு வரி விதித்துதண்டிக்காவிட்டால், செல்லாத நோட்டு அறிவிப்புக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்என்றும் கருதுகிறது. 50 சதவீதம் வரி அதற்கு நியாயமான அளவுக்கு வரி விதிப்பதேசரியானது என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. உள்நாட்டில் உள்ள கருப்புபணத்தை தாங்களாக தெரிவிப்பதற்கு கடந்த செப்டம்பர் 30-ந் தேதிவரை அவகாசம்அளிக்கப்பட்டு இருந்தது. அதை பயன்படுத்தி, கருப்பு பணத்தை தெரிவித்தவர்களுக்கு 45 சதவீத வரி விதிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல், தற்போது வங்கியில்கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு சற்று கூடுதலாக வரி விதிக்க மத்திய அரசுமுடிவு செய்துள்ளது. அதன்படி, நவம்பர் 10-ந் தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதிவரையிலான காலகட்டத்தில், வங்கியில், ரூ.2½ லட்சத்துக்கு மேல் டெபாசிட்செய்தவர்கள், கணக்கில் காட்டப்படாத பணத்தை தாங்களாக முன்வந்து வருமானவரித்துறைக்கு தெரிவித்தால், அதற்கு 50 சதவீத வருமான வரி விதிப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. 4 ஆண்டு கட்டுப்பாடு அத்துடன், வருமான வரி போக மீதியுள்ளடெபாசிட் பணத்தில் பாதிப்பணத்தை 4 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது என்றகட்டுப்பாட்டையும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், இந்தவாய்ப்பையும் பயன்படுத்தாமல், வருமான வரித்துறையே கண்டுபிடிக்கும் சூழ்நிலைஏற்பட்டால், அத்தகையவர்களின் கருப்பு பணத்துக்கு 90 சதவீத வருமான வரியும்அபராதமும் விதிக்கப்படும். வருமான வரி போக மீதியுள்ள டெபாசிட் பணத்தை நீண்டகாலத்துக்கு எடுக்க முடியாது. மந்திரிசபை ஒப்புதல் மத்திய அரசின் இந்த புதியதிட்டத்துக்கு வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டி உள்ளது. பிரதமர்நரேந்திர மோடி தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற மத்திய மந்திரிசபைகூட்டத்தில், இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதியின்சம்மதத்தை பெற்ற பிறகு, வருகிற திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை, பாராளுமன்றத்தில் இதுதொடர்பான சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இப்படி வசூலிக்கப்படும் வரி மூலம் கிடைக்கும் பணத்தைகொண்டு, கிராமப்புற உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஒரு நிதியத்தை மத்திய அரசுஉருவாக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி