கணக்கில் காட்டாத வருமானத்திற்கு 30% வரி; 33% கூடுதல்வரி

கணக்கில் காட்டாத வருமானத்திற்கு 30% வரி; 33% கூடுதல்வரி

புதுடில்லி : லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட வருமானவரி மசோதாவின் படி, கணக்கு காட்டாத வருமானத்திற்கு 30 சதவீதம் வரியும், 10 சதவீதம் அபராதமும், 33 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட உள்ளது.

திருத்தப்பட்ட வருமான வரி மசோதா : 

ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக தொடர்ந்து 10 வது நாளாக எதிர்க்கட்சிகளால் இன்றும் பார்லி.,யின் இருஅவைகளிலும் அமளி நிலவியது. எதிர்க்கட்சிகளில் கூச்சல் குழப்பத்திற்கு இடையே மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி, கணக்கில் காட்டாத வருமானத்திற்கு இனி 30 சதவீத வரி விதிக்கப்படும். 10 சதவீதம் அபராதமும், 33 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட உள்ளது. ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட அறிவிப்பிற்கு பிறகு கணக்கில் காட்டப்பட்ட தொகையில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அந்த தொகை பிரதமரின் ஏழைகள் நலன் வைப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். ஸ்வைப்பிங் மிஷின்கள் உற்பத்தியாளருக்கு, 12.5 சதவீதம் கலால் வரி மற்றும் 4 சதவீதம் சிறப்பு கூடுதல் வரி ஆகியன நீக்கப்படும். ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பிற்கு பிறகு, வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் வராத வருமானத்திற்கு 75 சதவீதம் வரியும், 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும். டெபாசிட் செய்யப்பட்ட கணக்கில் வராத வருமானத்தின் ஒரு பகுதியை 4 ஆண்டுகளுக்கு வெளியே எடுக்க முடியாது.



Source : http://www.dinamalar.com/news_detail.asp?id=1658731

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி