அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் விவகாரம்: பத்திரப்பதிவு தடையை நீக்க மறுப்பு

        அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் விவகாரம்: பத்திரப்பதிவு தடையை நீக்க மறுப்பு - நிலங்கள் வகை குறித்து தெளிவுபடுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு


அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை களை பத்திரப்பதிவு செய்ய விதிக் கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத் தப்பட்டுள்ளன என்பது குறித்து நீதிமன்றத்துக்கு தெளிவு படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.


‘தமிழகம் முழுவதும் விவசாய விளைநிலங்கள் அங்கீகரிக்கப் படாத வீட்டு மனைகளாக மாற்றப் பட்டு வருகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு, அங்கீகாரமற்ற வீட்டுமனை களை பத்திரப்பதிவு செய்ய இடைக் காலத் தடை விதித்து கடந்த செப்டம்பர் 9-ம் தேதி உத்தர விட்டது.

இந்தத் தடை உத்தரவால் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு ஸ்தம்பித்துள்ளதாகவும், ரியல் எஸ்டேட் தொழில் முடங்கிவிட்ட தாகவும் கூறிய ரியல் எஸ்டேட் சங்கத்தினர் பலரும், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

அதேபோல, வழக்கறிஞர் விபிஆர். மேனன் தாக்கல் செய்த மனுவில், ‘‘விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும்போது ஒருங்கிணைந்த விரிவான ஒற்றைச் சாளரக் கொள்கை திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

மனுதாரர் யானை ராஜேந்திரன்: விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி, ரியல் எஸ்டேட் அதிபர்கள் கோடிக் கணக்கில் லாபம் பார்க்கின்றனர். தடையை நீக்கினால் விவசாய நிலங்கள் பாழாகிவிடும்.

அரசு வழக்கறிஞர்: இந்த உத்தரவால், ஏற்கெனவே பதிவு செய்த மனையிடங்களையும், அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்க ளையும் விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நீதிபதிகள்: மத்திய, மாநில நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் விளைநிலங்களை மனையிடங் களாக மாற்றி விற்பனை செய்து விட்டு, ஒரு கட்டத்தில் தண்ணீர் பிரச்சினை எனக்கூறி சாலைக்கு வந்து போராடுகின்றனர். இப்பிரச்சி னைக்கு தீர்வாக ஒரு திட்டத்தை அரசுதான் கொண்டுவர வேண்டும்.

ரியல் எஸ்டேட் தரப்பு வழக்கறி ஞர்கள்: இந்தத் தடையால் பல கோடி ரூபாய் முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அனைத்துத் தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதிகள், தமது உத்தரவில் கூறியதாவது:

தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம் 2008 பிரிவு 22-ஏ படி தமிழக அரசு கடந்த அக்டோபர் 20-ம் தேதி ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன் 2-வது உட்பிரிவு, அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பதிவு செய்வதை தடை செய்கிறது. ஆனால், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு அந்தப் பிரிவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எத்தனையோ மனைப்பிரிவுகள் உள்ளன. அவற்றில், விவசாய நிலங்களை மனையிடங்களாக மாற்றக்கூடாது என்று மட்டுமே உத்தரவிட்டோம். இந்த உத்தரவால் அனைத்து பத்திரப்பதிவும் ஸ்தம்பித் துள்ளதாக கூறுவதை ஏற்கமுடி யாது. நாங்கள் ஒட்டுமொத்த பத்திரப்பதிவுக்கும் தடை விதிக்கவில்லை. அங்கீகரிக்கப் படாத மனையிடங்களுக்கு மட்டுமே தடை விதித்துள்ளோம்.

அப்படியென்றால் விவசாய விளைநிலங்கள்தான் மனையிடங் களாக மாற்றப்படுகிறதா என்பதை விளக்க வேண்டும். தமிழகத்தில் எந்தெந்த நிலங்கள் எவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி னால் மட்டுமே பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்க முடியும்.


இவ்வாறு கூறிய நீதிபதிகள், பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க மறுத்துவிட்டனர். வழக்கு விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி