தொழிலாளர் நல வாரியத்தில் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பம் வரவேற்பு
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின்கல்வி பயிலும்குழந்தைகளுக்கு கீழ்க்கண்டவாறு கல்வி உதவித் தொகைவழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
11ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை பயிலும்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு புத்தகம் வாங்குவதற்கு நிதியுதவி அளித்தல்; பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம்பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின்பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான கல்விஉதவித் தொகை; தொழிற்பயிற்சி கல்வி மற்றும் மேல்நிலைக்கல்விக்கான உதவித் தொகை; மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசுபொதுத் தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றுதேர்ச்சி பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகைவழங்கப்படுகிறது.
இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் 31.10.2016. மேலும் விவரங்களுக்கு, ‘‘செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை,தொலைபேசி: 2432 1542, இணைய தள முகவரி: www. labour.tn.gov.in’’ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.