சென்னை உயர்நீதி மன்றம் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகள் நிலங்கள் மட்டுமே பதிவு செய்ய பட வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவு பிரப்பித்துத்துள்ளது

சென்னை உயர்நீதி மன்றம் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகள் நிலங்கள் மட்டுமே பதிவு செய்ய பட வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவு பிரப்பித்துத்துள்ளது. ஆகவே அது குறித்து சில விஷயங்களை பார்ப்போம்.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (CMDA) மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கம் (DTCP) இவை தமிழகத்தில் நில அமைப்பு ஒப்புதல் வழங்கும் அதிகரம் பெற்ற அரசு அமைப்புகள். CMDA-வின் அதிகார வரையரை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்குட்பட்ட அதிகார எல்லைகளுக்குள்ளேயே உள்ளது. மாநிலத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் (DTCP)யின் அதிகார வரையறையுள்ளது. நில அமைப்பு ஒப்புதல் வழங்கும் பொறுப்பு 10 ஏக்கர் (5 ஏக்கரிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது) வரை உள்ளூர்த் திட்ட அதிகார அமைப்பால் (LPA) வழங்கப்படுகிறது. LPA, DTCP அமைப்பின் துணைக்குழு. 10 ஏக்கருக்கு மேல் நில அமைப்பு ஒப்புதல் வழங்கும் பொறுப்பு சென்னையில் உள்ள DTCP தலைமை அலுவலகத்தில் உள்ளது.

பஞ்சாயத்து அமைப்பு குறித்து பொதுமக்களிடையே போதுமான சட்டவிழிப்புணர்வு இல்லை. ‘பஞ்சாயத்து ஒப்புதல்’ என்று எந்தச் சொல்லியல் முறையும் இல்லை. CMDA, LPA மற்றும் DTCP ஆகியவை மட்டும் அங்கிகரிக்கப்பட்ட மனைகளுக்கு ஒப்புதல் வழங்கும் அமைப்புகள். எந்த ஒரு பஞ்சாயத்துத் தலைவருக்கும் அவரவர் எல்லைப் பகுதியில்கூட நில அமைப்பு தொடர்பான ஒப்புதல் வழங்கும் அதிகாரம் இல்லை. மேலும் பஞ்சாயத்துத் தலைவர் DTCP/CMDAவால் அங்கிகரிக்கப்பட்ட மனைகளுக்கு மட்டும் கட்டிட அனுமதி வழங்கலாம்.

நில அமைப்பு ஒப்புதல் வழங்குவதற்கான நிபந்தனைகள்:

1. தாசில்தாரிடமிருந்து ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ் (NOC) பெறவேண்டும். அந்த நிலமானது புறம்போக்கு நிலமாக இருக்கக் கூடாது. நிலச் சீர்திருத்த சட்டம் 1961, நில உச்சவரம்புச் சட்டம் 1978 மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளின் கீழ் வரக் கூடாது.

2. தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணத்தில் FMB/டவுண் சர்வே ஸ்கெட்ச், பட்டா/ சிட்டா/ நில கணக்கெடுப்பு “A” சான்று பதிவு, கிராம வரைபடம், அந்த நிலபகுதியில் உள்ள நீரோட்டம் தொடர்பான விவரங்கள் கூறிப்பிடப்பட வேண்டும்.

3. 2,500 சதுர மீட்டருக்கு மேல் (26900 Sq.ft) இருப்பின், 10 சதவீத நிலத்தை திறந்த வெளி இட ஒதுக்கீடு செய்ய (Open Space Reservation) வேண்டும். இந்த இடத்தைத் தான பத்திரம் மூலம் அரசுக்குப் பதிவுசெய்ய வேண்டும். 10,000 சதுர மீட்டர்க்கு மேல் (107600 Sq.ft) இருப்பின் (ரோடுகளைத் தவிர்த்து) பொதுச் சேவைகளுக்கு (கல்விக் கட்டிடம், தபால் நிலையம், காவல் நிலையம், பூங்கா) ஒதுக்கீடுசெய்ய வேண்டும். மேலும் 10 சதவிகித நிலத்தைப் பொருளாதாரத்தில் பின் தங்கிய (Economically Weaker Section) நபர்களுக்கு ஒதுக்கீடுசெய்ய வேண்டும். ஒருவேளை ஒதுக்கீடுசெய்ய முடியாவிட்டால் அந்த 10 சதவீத நிலத்தை நில அமைப்பில் இருந்து 5 கீ.மி. சுற்றளவை உள்ள இடத்தில் அரசாங்கத்துக்குத் தானமாக வழங்க வேண்டும்.

4. மின்சார/ தொலைபேசி வரி தளம் அந்த பாதையில் இருந்தால் ஒரு மறுசீரமைப்பு சமர்ப்பிக்க வேண்டும்.

5. கீழ்க்கண்ட இடங்களில் உள்ள நிலத்துக்கு அது சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து NOC பெறுவது கட்டாயமாகும்.

a) நீர் நிலைகளில் இருந்து 15 மீட்டர் தொலைவில் இருந்தால் (பொதுப்பணித்துறை அல்லது சம்பந்தப்பட்ட துறை)
b) இரயில் பாதையிலிருந்து 30 மீட்டர் (இரயில்வே துறை)
c) ஒரு உர புறத்திலிருந்து (ComPost Yard) (உள்ளாட்சி)
d) இடுகாடு/ சுடுகாட்டிலிருந்து 90 மீட்டர் (சுகாதார அதிகாரி)
e) கல் குவாரியிலிருந்து 300 மீட்டர் (சுரங்க அதிகாரி)
f) 500 மீட்டர் நொறுக்கு (Crusher) ஆலையிலிருந்து. (சுரங்க அதிகாரி)
g) 500 மீட்டர் விமான நிலையத்திலிருந்து (இந்திய விமான அதிகாரத் துறை)

6. TOPO நில அமைப்பு
2000-ம் ஆண்டு முதல் நில அமைப்பு ஒப்புதல் சரிபார்த்தலை CMDA இணையதளமான www.cmdachennai.gov.in என்ற இணையதளத்திலும் காணலாம். அதேபோல், 2011-2012-ம் ஆண்டு முதல் DTCP வழங்கிய அங்கிகரிக்கப்பட்ட ஒப்புதல்களை DTCP இணையதளமான www.tn.gov.in/tcp என்ற தளத்திலும் சரிபார்க்கலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி