சி.பி.எஸ்.இ., வாரியம் : பெற்றோருக்கு எச்சரிக்கை

சி.பி.எஸ்.இ., வாரியம் : பெற்றோருக்கு எச்சரிக்கை

'பள்ளிகளில், 'சீட்' வாங்கித் தருவதாக கூறி பணம்வசூலிப்பவர்களிடம் ஏமாற வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., கல்விவாரியம் எச்சரித்துள்ளது. மத்திய அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும்மத்திய மேல்நிலை கல்விவாரியம் எனப்படும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க,பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதைப் பயன்படுத்தி, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் போல் நடித்து,பெற்றோரிடம் பணத்தை மோசடி செய்வது அதிகரித்துள்ளதாகபுகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளதாவது:சி.பி.எஸ்.இ.,அதிகாரிகள் என, சிலர் தங்களை போன் மூலம் அறிமுகப்படுத்தி,பள்ளிகளில் சீட் வாங்கித் தருவதாக பெற்றோரிடம் கூறுகின்றனர்.இவர்களை நம்பி, வங்கிகளில் பணத்தை டிபாசிட் செய்ய வேண்டாம்.இது போன்ற மோசடி தொடர்பாக, அதிகளவில் புகார்கள் வருகின்றன.இவ்வாறு, சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி