தமிழக அரசிடம் கைமாறும் ஆதார்!

தமிழக அரசிடம் கைமாறும் ஆதார்!
இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் 12 இலக்க அடையாளஎண் கொண்ட அட்டைதான் ஆதார் அடையாள அட்டை. மக்கள்தொகையில் இரண்டாவது மிகப்பெரிய நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன்மூலம்மத்திய அரசின் அனைத்துச் சலுகைகளும் முறையாக சென்றடைவதற்கும் மக்கள்தொகையை எளிதில் கணக்கெடுப்பதற்கும் இந்தச் சேவைதொடங்கப்பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஆதார் பதிவு தொடங்கப்பட்டு இந்தியாவில்உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆதார் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்கும் பணியை தேசியமக்கள் கணக்கெடுப்புத் துறையான சென்செஸ் துறை செயல்படுத்திவந்தது. ஆனால் இனி (அக்டோபர் 1) தமிழகத்தில் ஆதார் பதிவைதமிழக அரசே கையாளும் என்று சென்செஸ் துறை அறிவித்துள்ளது.


ஆதார் பதிவுசெய்ய மத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்துக்கு தமிழக அரசு வழங்கிய அனுமதி செப்டம்பர் 30ஆம்தேதியுடன் (இன்று) நிறைவடைகிறது. இதுவரை தமிழகத்தில் சுமார்640 மையங்களில் சென்செஸ் துறை ஆதார் பதிவுக்கான பணியைமேற்கொண்டு வந்தது. ஆனால் இத்திட்டத்துக்கு போதிய அளவில்மக்களிடம் வரவேற்பு கிடைக்காததால் இந்தத் திட்டத்தை தமிழகஅரசிடம் ஒப்படைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. நாளை முதல் தமிழகஅரசிடம் வழங்கப்படவுள்ள ஆதார் பதிவுத் திட்டம் அனைத்து இ -சேவை மையங்களிலும் மேற்கொள்ளப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, இனி தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறைமக்களுடைய ’பயோ மெட்ரிக்’ தகவல்களைச் சேகரித்து, அந்தத்தகவலை ஆதார் ஆணையமான UIDAI -யிடம் வழங்கியபின்னர்அத்துறை ஆதார் அட்டைகளை மக்களுக்கு வழங்கும்.



2015ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேட்டு விவரங்களின்படி,தமிழகத்தில் 7 கோடியே 64 லட்சத்து 75 ஆயிரத்து 852 பேர்வசிக்கின்றனர். இதில், கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நிலவரப்படி 6கோடியே 44 லட்சத்து 92 ஆயிரத்து 854 பேருக்கு ஆதார் அட்டைவழங்கப்பட்டுள்ளது. 1 கோடியே 19 லட்சத்து 82 ஆயிரத்து 998 பேருக்குஇன்னும் ஆதார் வழங்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி