52 ஆண்டு கால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர உழைத்த கொலம்பியா அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஜூவான் மேனுவல் சாண்டோஸ்

52 ஆண்டு கால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர உழைத்த கொலம்பியா அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 

52 ஆண்டு கால உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர உழைத்த கொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோசுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு உலக அளவில் பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த ஆண்டுக்கான சர்வதேச அமைதிக்கான நோபல் பரிசு, கொலம்பியா நாட்டின் அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோசுக்கு (வயது 65) வழங்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்த அறிவிப்பை நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோ நகரில், அமைதிக்கான நோபல் பரிசு குழுவின் தலைவர் கேசி குல்மான் பைவ் வெளியிட்டு, “இந்தப் பரிசு, கொலம்பியா மக்களுக்கும் ஒரு காணிக்கையாக அமையும்” என்று குறிப்பிட்டார். எதற்காக இந்த நோபல் பரிசு? கொலம்பியா நாட்டில் அரசு படைகளுக்கும், ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் (மார்க்சிஸ்ட் கொரில்லா படையினர்) இடையே 1964-ம் ஆண்டு தொடங்கி 52 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. இதில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டின் அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், பார்க் கிளர்ச்சியாளர்களுடன் 4 ஆண்டுகள் சமரசப்பேச்சு வார்த்தை நடத்தி அதில் வெற்றி கண்டார். சமீபத்தில் அவர், பார்க் கிளர்ச்சியாளர்கள் குழுவின் தலைவர் டிமோசெங்கோ ஜிமெனசுடன் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையை படைத்த கொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோசுக்கு, சமீபத்தில் நடந்த கருத்தறியும் பொதுவாக்கெடுப்பில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இந்த உடன்பாட்டை மக்கள் நிராகரித்தது ஒரு சறுக்கலாக அமைந்தது. ஆனாலும், அந்த உடன்பாடு புதுப்பிக்கப்படும், அமைதி நிலைநிறுத்தப்படும் என அவர் உறுதி அளித்தார். நவீன உலகில் 52 ஆண்டு கால உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அவர் எடுத்த முயற்சிகள், நடத்திய சமரச பேச்சுவார்த்தை, உழைத்த உழைப்பு ஆகியவற்றை கவுரவிக்கும் வகையில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி