இங்கிலாந்தில் பிறந்த 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

இங்கிலாந்தில் பிறந்த 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு 

இங்கிலாந்தில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானிகள் 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளில் சாதனை படைக்கிறவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி யோஷினோரி ஒசுமிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

3 பேருக்கு இயற்பியல் நோபல் பரிசு 

டேவிட் தவ்லெஸ்

டங்கன் ஹால்டன்


மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ்


இந்த நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் தவ்லெஸ், டங்கன் ஹால்டன், மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய 3 பேருக்கும் கூட்டாக வழங்கப்படுகிறது. 9 லட்சத்து 37 ஆயிரம் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.6 கோடியே 27 லட்சம்) பரிசுத்தொகையில் சரிபாதி டேவிட் தவ்லெசுக்கும், மீதி சரிபாதி டங்கன் ஹால்டன், மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பருப்பொருள் மூலக்கூறு ஆராய்ச்சி இதுவரையில் அறியப்படாத பருப்பொருள் (புலன்களால் உணர்ந்து அறியக்கூடிய வெளிப்படையான பொருள்) மூலக்கூறு தொடர்பாக இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நோபல் பரிசு குழுவினர் கூறும்போது, “இவர்களின் ஆராய்ச்சி, தெரியாத ஒரு உலகத்திற்கான கதவுகளை திறந்து விட்டுள்ளது. அவர்களின் பணிக்கு நன்றி. புதிய அன்னிய பருப்பொருளின் ஆராய்ச்சிக்கு இது உதவும்” என்றனர். இந்த 3 விஞ்ஞானிகளும் இங்கிலாந்தை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். டேவிட் தவ்லெஸ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலும், டங்கன் ஹால்டன் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும், மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் பிரவுன் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி