'ஜியோ' வாங்க அலைமோதும் மக்கள்... சென்னையில் நெரிசல்!

'ஜியோ' வாங்க அலைமோதும் மக்கள்... சென்னையில் நெரிசல்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய வரவான ஜியோ சிம் வாங்க சென்னையில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. விடுமுறை நாளான இன்றும் சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணாசாலை, அடையார், நுங்கம்பாக்கம் இங்கெல்லாம் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடைகளில் காலைமுதல் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கால்கடுக்க நின்று ஜியோ சிம் வாங்கிச் செல்கிறார்கள். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா தியேட்டர்,கிரிக்கெட் ஸ்டேடியம் தவிர செல்போன் சிம் வாங்க மக்கள் கியூவில் நிற்பது ஜியோ சிம் வாங்கத்தான் என்கிறார்கள் சிம் விற்பனையாளர்கள்.

கடந்த 1ம் தேதி மும்பையில்,ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ சிம் திட்டத்தை அறிமுகம் செய்தார்.அன்று தொடங்கிய 'ஜியோ பீவர்' விடுமுறை நாளான இன்று உச்சத்தைத் தொட்டுள்ளது.இந்தியா முழுக்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிம் விற்பனை நிலையங்கள் 3,383 ஆகும். இவை இந்தியாவின் 210 நகரங்களில் அமைந்துள்ளன. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்,மும்பை என்று பெரும்பாலான நகரங்களில் ஜியோவுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுகிறது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையில் சென்னையின் அண்ணாசாலையில் உள்ள ரிலையன்ஸ் ஷோரூமில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு கூட்டம் அலைமோதுகிறதுஜியோ அறிமுகவிழாவில், முகேஷ் அம்பானி "வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது ரிலையன்ஸ். நீங்கள் ஜியோ பயன்படுத்தினால், வாய்ஸ் காலிங் அல்லது டேட்டா இரண்டில் ஒன்றிற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். மற்றொன்று இலவசம். இந்தியா முழுக்க, ரோமிங் கட்டணமே கிடையாது. ஜியோவின் டேட்டா கட்டணங்கள் உலகிலேயே மிகவும் மலிவானது. 1 GB டேட்டா, 50 ரூபாய்தான். அதாவது 1 MB டேட்டாவின் விலை 5 பைசாதான். நீங்கள் அதிகம் பயன்படுத்துங்கள். ஆனால் குறைவாக பணம் செலுத்துங்கள்.

அத்துடன் ஜியோ இந்தியா முழுக்க, பொது இடங்களில் வைஃபை வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உங்கள் டேட்டா கட்டணத்தை மேலும் சேமிக்க முடியும். மாணவர்களுக்கு ஜியோ மேலும் சிறப்பு சலுகையை அளிக்கிறது. ID கார்டை மட்டும் மாணவர்கள் வைத்திருந்தால் போதும். எங்கள் டேட்டா விலையில் மேலும் 25% சலுகையை அவர்கள் பெற முடியும்." என்று கூறினார். இதனை மொபைல் நெட் பயன்பாட்டாளர்கள் மிகச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளார்கள் என்றே கூறலாம்.


கடந்த 7ம் தேதி, பெங்களூருவில் ஜியோ சிம் கேட்டு ஷோரூம்களில் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.அங்குள்ள இந்திராநகர்,எம்.ஜி.ரோடு பகுதிகளில் 'ஜியோ பீவர்' அதிகம் பரவியுள்ளதாகத் தெரிகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி