அகில இந்திய அளவில் நடைபெறும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

அகில இந்திய அளவில் நடைபெறும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் 

மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கு அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். மருத்துவ கல்வி மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமாக நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மாணவர்களின் பிளஸ்-2 கட்-ஆப் மதிப்பெண்ணை வைத்து கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. மருத்துவ கல்வியில் பொது நுழைவுத்தேர்வு கொண்டுவரும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 

அதன் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஊழலை தடுத்து வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும், பலதரப்பட்ட தேர்வு முறைகளை முடிவுக்கு கொண்டுவரவும், கவுன்சிலிங்கை கல்வி நிலையங்கள் தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்துவதை நிறுத்தவும் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு (நீட்) நடத்த ஏதுவாக இந்திய மருத்துவ கவுன்சில் சட்டதிருத்தம் - 2016, பல் மருத்துவ சட்டதிருத்தம் -2016 ஆகியவை பாராளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 1-ந் தேதி இந்த சட்டதிருத்தங்கள் டெல்லி மேல்-சபையிலும் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து இவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்திய மருத்துவ கவுன்சில் (திருத்த) சட்டம் -2016, பல் மருத்துவ (திருத்த) சட்டம் -2016 ஆகிய 2 சட்டங்களுக்கும் ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2017-18 கல்வி ஆண்டில் இந்த மருத்துவ பொது நுழைவுத் தேர்வு 2017-18-ம் கல்வி ஆண்டில் இருந்து அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கும் இந்தி, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி