இணையத்திலும் பெறலாம் வில்லங்க சான்றிதழ்



வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவோர் அதன் முந்தைய உரிமையாளர்கள் பற்றி அறிந்துகொள்ளவும், சொத்தில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா..? என தெரிந்துகொள்ளவும் வில்லங்க சான்று பெறுவது வழக்கம். சார்பதிவாளர் அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்து 10 நாட்களுக்குள் வில்லங்க சான்றிதழை பெறுவது நடைமுறையாகும்.

இணையத்தில் பெறலாம்

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வில்லங்கச் சான்று வழங்க ஆகும் காலதாமதம் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தின் மூலம் விண்ணப்பித்து, வில்லங்க சான்றிதழை விரைவாக பெறும் சேவையை பத்திர பதிவு துறை தொடங்கியது. இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்று பெற விரும்புபவர்கள் உரிய கட்டணத்தை இணையத்தில் செலுத்தி தபால் மூலம் அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து இரண்டு நாட்களுக்குள் பெற்று கொள்ளலாம்.

வீட்டிலிருந்தவாறு இணையத்தின் மூலமாக வில்லங்க சான்றிதழை பெறும் வசதி இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்றுதான் விண்ணப்பம் செய்து ஈ.சி. எனப்படும் வில்லங்க சான்றிதழை பெற வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவிறக்கம்

இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறவேண்டுமானால் தமிழகப் பதிவுத்துறையின் tn.reginet.net    என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும். அந்த இணைய தளத்தில் வில்லங்க சான்றை பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்கும் தனி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த தளத்தில்   to view encumbrance certificate  என்ற ‘லிங்க்கினை க்ளிக்’ செய்வதன் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பார்க்கும் அல்லது பெறும் வலைத்தளத்திற்குள் செல்லலாம். மேலும்   http://ecview.tnreginet.net  என்ற இணைய முகவரியின் மூலமாகவும் நேரடியாக வில்லங்கச் சான்றிதழைப் பெறும் வலைத்தளத்திற்குள் செல்லலாம்.

அந்த தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள பதிவு மண்டலம், பதிவு மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், சொத்து அமைந்துள்ள கிராமம், சர்வே எண், தேதி மற்றும் மாதங்கள் உட்பட எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் தேவைப்படுகிறது என்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள ஊர் ஆகிய தவல்களை பதிவு செய்தும் வில்லங்க சான்று விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

அதே பக்கத்தில் கொடுக்கப்பட்டுள் ரகசியக் குறியீட்டு எண்ணை தருவதன் வாயிலாக 10 நிமிடங்களுக்குள் வில்லங்கச் சான்று விவரங்களை இணையத்தில் பார்க்க இயலும். அத்துடன்   ஜீபீயீ   வடிவத்தில் வில்லங்கச் சான்று விவரங்களை பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.

தமிழகத்திலுள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் இணையத்தின் மூலம் வில்லங்க சான்று விவரங்களை இலவசமாகப் பெறுவது சுலபமான ஒன்று. 1987–ம் ஆண்டில் இருந்து இந்த விவரங்களை பெற முடியும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி