TNPSC VAO Exam Result 2016 | கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு வெளியீடு.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 28.02.2016 மு.ப. அன்று கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான 813 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தியது. அதில் பங்குபெற்ற 7,70,860 விண்ணப்பதாரர்களில் 7,61,042 நபர்களின் மதிப்பெண், தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை (Overall Rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலையும் (Communal category wise Rank), சிறப்புப் பிரிவு (Special Category) விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை (Register Number) உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். 

விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக்கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் 01.08.2016 முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அவர்களின் தரவரிசை நிலை (Ranking Position), காலியிட நிலை (Vacancy Position) மற்றும் இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு பின்னர் அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்படும். மேற்படி தேர்வில் கலந்துகொண்டு, இப்பதவிக்கான அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.| TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examination for 813 vacancies in the posts of Village Administrative Officer was conducted by the Tamil Nadu Public Service Commission on 28.02.2016 FN. Out of 7,70,860 candidates appeared in the written examination, the Marks and Rank Position of the 7,61,042 candidates is hosted in the Commission’s Website “www.tnpsc.gov.in”. The Overall Rank, Communal category wise Rank and Special Category Rank of the candidates are also hosted. The candidates may get their Marks and Rank by entering their Register Number. The Ranking List has been arrived based on the claims relating to age, educational qualification, technical qualification, Communal category, special category status etc. made by the candidates in their online applications. If any of their claims are found to be false or incorrect at the time of Certificate Verification, their candidature will be cancelled and they will not be permitted to attend the counselling. The Candidates will be called for Certificate Verification from 01.08.2016 onwards. Later, they will be called for Counselling according to their ranking position, vacancy position and rule of reservations of appointment. The details regarding the date of Counselling will be hosted in the Commission’s website (www.tnpsc.gov.in) soon. The marks of the candidates who have not acquired the qualifying marks is also hosted in the Commission’s website. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS 



Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி