சர்வதேச ஒலிம்பியாட்டில் திண்டுக்கல் மாணவருக்கு தங்கம்

சர்வதேச ஒலிம்பியாட்டில் திண்டுக்கல் மாணவருக்கு தங்கம்

           சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 2ம் வகுப்பு மாணவர், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 'ஒலிம்பியாட்' போட்டி என்பது அறிவுத் திறனை சோதிக்கும் எழுத்து தேர்வு. இதில் பொது அறிவு, கணிதம், அறிவியல், சமூகம் குறித்த பல்வேறு வகையிலான கேள்விகள் இடம் பெறும்.
 
            பல மட்டங்களில் நடந்த தகுதிப் போட்டிக்குப்பின், அந்தந்த மாநிலங்களில் சர்வதேச போட்டி நடந்தது. இதில் திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியின் 2ம் வகுப்பு மாணவர் ரெனிஸ் கார்த்திக், தங்கம் வென்றார். அதே பள்ளியை சேர்ந்த 2ம் வகுப்பு மாணவி பிரக்கியா வெள்ளி வென்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி