அகில இந்திய சி.ஏ., தேர்வில் தமிழக மாணவர் ஸ்ரீராம் முதலிடம்

இவரது தந்தை ஓய்வுப்பெற்ற போக்குவரத்துத் துறை ஊழியர், தாயார் நுாலகராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த ஜான் பிரிட்டோ முதலிடம் பிடித்திருந்தார். இதையடுத்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழகம் சி.ஏ., தேர்வில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஸ்ரீராம் அளித்த பேட்டி, லட்சியப்படிப்பான சி.ஏ. படிப்பை தொடர்ந்து படித்ததால் வெற்றி பெற்றேன். மூன்றாண்டு கடின உழைப்பிற்கு பலன் கிடைத்தது என்றார்.
தொடர்ந்து விஜயவாடாவைச் சேர்ந்த வெங்கட விஸ்வ உபேந்திரா என்ற மாணவர் இரண்டாமிடமும், குஜராத் மாணவர் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.