திண்டுக்கல்: ராஜஸ்தான் மாநிலம், உதயப்பூரில் ஆசிய அளவிலான சப்-ஜூனியர் வலு தூக்கும் போட்டி நடைபெற்றது. 66கிலோ பிரிவில் ஸ்குவாட் 145 கிலோ, பெஞ்ச்பிரஸ் 75 கிலோ, டெட்லிப்ட 175 கிலோ என மொத்தம் 395 கிலோ தூக்கி, திண்டுக்கல் எம்எஸ்பி பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சாம்எசேக்கியா சாதனை படைத்துள்ளார். ஆசிய அளவில் இது மூன்றாம் இடம். இவருக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
தலைமையாசிரியர் ஜெகதீசன்செல்வராஜ் தலைமை வகித்தார். தாளாளர் முருகேசன் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார். விழாவில் சாதனை படைத்த மாணவருக்கு விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது.
Source : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=226143