தேசிய ஓய்வூதிய அமைப்பு - NPS SCHEME (CPS)

தேசிய ஓய்வூதிய அமைப்பு - NPS SCHEME (CPS)

தேசிய ஓய்வூதிய அமைப்பு என்பது ஒரு ஓய்வூதிய சேமிப்புக்கணக்காகும். இந்த ஓய்வூதிய கணக்கில் தனிநபர் தன் பங்களிப்பைஅளித்து வருவார், இது சாதாரண வங்கி சேமிப்பு கணக்கு போன்றுதோன்றினாலும் சற்று வித்தியாசமானது.


புதிய என்.பி.எஸ். 2015-ஐ சுலபமாக அணுகக்கூடியதாக, குறைந்தசெலவுடையதாக, சிறந்த வரி விலக்கைக் கொண்டுள்ளதாக, நெகிழ்வானதாக மற்றும் கையடக்கமானதாக அமைந்துள்ளது.

சமீபத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களையும் என்.பி.எஸ்.கணக்கில் பதிவு செய்திட அரசாங்கம் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது, 18-60 வயதிற்குள் உள்ள என்.ஆர்.ஐ.-கள்,கே.ஒய்.சி. நெறிகளுக்கு இனங்கள், என்.பி.எஸ். கணக்கைத்திறக்கலாம்.



1) ஓய்வூதிய கணக்கு எண்
என்.பி.எஸ். கணக்கு திறக்கப்பட்டவுடன், கணக்கைத் திறந்துள்ளஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் தனித்துவமான 12 இலக்குஎங்களைக் கொண்டுள்ள நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்(பெர்மனன்ட் ரிடைர்மெண்ட் அக்கௌன்ட் நம்பர் - பி.ஆர்.ஏ.எண்)வழங்கப்படும்.


2) 2 அடுக்குக் கணக்குகள்
என்.பி.எஸ். கணக்கின் கீழ், அடுக்கு-I மற்றும் அடுக்கு-II என இரண்டுதுணை கணக்குகள் வழங்கப்படும். அடுக்கு-I கணக்குக்கட்டாயமானதாகும். அடுக்கு-II கணக்கைத் திறப்பதும்செயல்படுத்துவதும் உடைமையாளரின் விருப்பமாகும்.

எளிமையாக மாற்றிக்கொள்ளும் வசதி
தனி நபரின் வேலை மற்றும் இருப்பிடம் ஏதுவாக இருந்தாலும்,என்.பி.எஸ். கணக்கை நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும்செயல்படுத்தலாம். இதனைத் தனியாரிலிருந்து அரசாங்கத்திற்கு,அல்லது அரசாங்கத்திலிருந்து தனியாருக்கு, அல்லதுதனியாரிலிருந்து கார்ப்பரேட்டுக்கு அல்லது கார்ப்பரேட்டிலிருந்துதனியாருக்கு என ஒரு பிரிவில் இருந்து மற்றொன்றுக்குமாற்றிக்கொள்ளலாம்.

நாமினி நியமனம்
பி.ஆர்.ஏ.என். பதிவின் போது நீங்கள் நாமினேஷன் வசதியைப்பயன்படுத்தினால், அதற்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது


2 திட்டங்கள்
தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் இரண்டு நிதி நிர்வாகத் திட்டங்கள்உள்ளது; ஒன்று உயிர்ப்புள்ள தேர்வாகும் - இதில் தான் பங்களிக்கும்தொகையை எந்தச் சொத்து வகுப்புகளில், எந்த விகிதத்தில் முதலீடுசெய்ய வேண்டும் என்பதை அந்தத் தனிப்பட்ட நபரேமுடிவெடுக்கலாம்.


முதலீடு அளவுகள்
மற்றொன்று தன்னியலான தேர்வாகும் - வாழ்க்கை சுழற்சி நிதியம்(லைஃப்சைக்கில் ஃபண்ட்) - இதுவே என்.பி.எஸ்.-ன் முன்னிருப்புத்தேர்வாகும். இதில் பதிந்தவரின் வயதைப் பொறுத்து, நிதியை முதலீடுசெய்யும் நிர்வாகம் தானாகவே நடக்கும்.


வரிச் சலுகை
இந்த நிதிநிலையிற்குப் பிறகு, பிரிவு 80 சிசிடி-யின் கீழ் என்.பி.எஸ்.ஒரு பகுதியாவதால், ரூ.50,000/- கூடுதல் வரி விலக்கு கிடைக்கும்.


பங்கு முதலீடு
இதனால் கிடைக்கும் மற்றொரு பயன் - இனி பங்குகளிலும் (ஈக்விட்டி)ஒருவர் தன் முதலீட்டை மேற்கொள்ளலாம். அதனால் உங்கள்நிதியைப் பங்கில் அல்லது கடனில் முதலீடு செய்ய வேண்டுமாஎன்பதை உங்களது இடர்பாடு அளவு, வயது போன்ற காரணிகளைக்கொண்டு நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.


3 முறை மட்டுமே
தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ், பதிந்தவர்கள் ஒட்டு மொத்த பதிவுகாலத்தில், அதிகப்படியாக மூன்று முறை மட்டுமே பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். அப்படிப் பணத்தை எடுக்கப்பட்ட தேதியில் இருந்துஅடுத்த ஐந்து வருடத்திற்குக் குறையாமல் மீண்டும் பணத்தை எடுக்கமுடியாது.



அடுக்கு-I கணக்கு
பதிவு செய்தவர் தன்னுடைய அடுக்கு-I கணக்கில், ஒரு நிதியாண்டில்குறைந்தது ரூ.6,000/-ஐ வருடாந்திர பங்களிப்பாக அளிக்க வேண்டும்.அப்படிப் பங்களிக்காத பட்சத்தில் அந்தக் கணக்கு முடக்கப்படும்


40% தொகை

பதிவு செய்தவருக்கு 60 வயது பூர்த்தியானவுடன், அவருடையஓய்வூதிய சொத்தில் குறைந்தது 40%-ஐ ஆண்டுத்தொகை வாங்கபயன்படுத்திக் கொள்ள வேண்டும். மீதமுள்ள தொகை அவருக்குமுழுவதுமாகக் கிடைத்து விடும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி