நாட்டின் புதிய ஐஐடி உயர்கல்வி நிறுவனம் !!!

நாட்டின் புதிய ஐஐடி உயர்கல்வி நிறுவனம் !!!

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நாட்டின் புதிய ஐஐடி உயர்கல்வி நிறுவனம் அமையவுள்ளது.ஜம்மு நகரில் இந்த புதிய ஐஐடி வளாகத்தை அமைப்பதற்காக ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு, டெல்லியிலுள்ள ஐஐடி வளாகத்துடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ஐஐடி டெல்லி இயக்குநர் பேராசிரியர் வி. ராம்கோபால் ராவ், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் உயர்கல்வித்துறை செயலர் ஹேமந்த்குமார் சர்மா ஆகியோர் கையெழுத்தியிட்டுள்ளனர்.ஜம்மு-காஷ்மீர் மாநில துணை முதல்வர் நிர்மல் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.ஜம்மு நகரிலுள்ள நக்ரோடா பகுதிக்கு அருகிலுள்ளள ஜாக்டியில் இந்த புதிய ஐஐடி வளாகம் அமைகிறது.625 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய ஐஐடி அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.நடப்புக் கல்வியாண்டிலேயே இந்த ஐஐடி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி