இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் தபால் மற்றும் பலவித அரசு சேவைகளை வழங்கி வருகின்றன. வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக ரிசர்வ் வங்கியிடமும் விண்ணப்பித்து இருந்தது தபால் துறை. அண்மையில், நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் கோர் பேங்கிங் வசதியையும் அதிகரித்து வருகிறது. இதுதவிர, போஸ்டல் ஏ.டி.எம்.களும் நிறுவப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய தபால் துறையின் நிதிப்பற்றாக்குறை 2014-15 நிதியாண்டில் 14.35 சதவீதம் அதிகரித்து ரூ.6,258.60 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே சென்ற 2013-14 நிதியாண்டில் ரூ.5,473.10 கோடியாக இருந்தது. ஊழியர்களுக்கான ஆண்டுச் சம்பள உயர்வு, டி.ஏ. ஊக்கத்தொகை அதிகரிப்பு, விடுப்புடன் கூடிய சம்பளம் போன்ற காரணங்களால் நிதிப்பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது