பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியாகும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதியுள்ளனர்.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 17-ம்தேதி காலை 10.30 முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 25-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
