இந்தியாவில் இருக்கும் இன்டர்நெட் பயனர்களினால் கடந்த 2,3 நாட்களில் அதிகமாகபேசப்பட்ட விடயம். பி.எஸ்.என்.எல் நிறுவனம்வெறும் 50 ரூபாய்க்கு வழங்கும் 20GB அளவான 3G டேட்டா. இணைய பாவனையாலர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த இந்த விடயம் பற்றி நமது தளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னரே பதிவொன்று எழுதப்பட்டது.
அதாவது டிஜிட்டல் இந்தியாவின் மற்றுமொரு திட்டமாக பி.எஸ்.என்.எல்நிறுவனம் மிகச்சிறந்ததொரு இன்டர்நெட் சலுகையை அறிமுகபடுத்தி உள்ளது. இந்த சலுகைமூலம் வெறும் 50 ரூபாய்க்கு 20 GB அளவான 3G இன்டர்நெட் டேட்டாவை நமது விருப்பம் போல பயன்படுத்த முடியும்.மேலும் இந்த இன்டர்நெட் சலுகை மூலம் நீங்கள் பெறும் 20 GB டேட்டாவை இந்தயாவில் எந்த மூலையில் வேண்டுமானாலும் இருக்கும் மேலதிக 4 பி.எஸ்.என்.எல் பாவனையாளர்ளுடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.ஆகவே இந்த டேட்டா பேக்-ஐ முதலில் செயட்படுத்துபவர் கணக்கில் இருந்து 50 ரூபாய் எடுக்கப்படுவதுடன் மேலதிகமாக இணையும் நான்கு பாவனையாளர்களிடம் இருந்து எந்த விதமான கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மற்றுமொறு முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய இன்டர்நெட் சலுகையின் நோக்கம், இந்திய நாட்டின் அனைத்து பாகங்களிலும் வாழும் நடுத்தர மக்களும் இன்டர்நெட்-ஐ பாரபட்சம் இன்றி பயன்படுத்த வேண்டும் என்பதேயாகும்.
இந்த டேட்டா பேக்-ஐ எக்டிவ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இந்த ஆபரை நீங்கள் பெற்றுக்கொள்ள, கட்டாயமான நீங்கள் ஒரு பி.எஸ்.என்.எல் பயனராக இருக்க வேண்டும்.
அடுத்து கீலே தறப்பட்டிர்க்கும் BSNL 'செல்ப் கேர் போர்டல்'-இல், உங்களது போன் நம்பர் மற்றும் ஏனைய தனிப்பட்ட விடயங்களை வழங்கி கனக்கொன்றை ஆரம்பித்து கொள்ளுங்கள்.இப்போது குறித்த கணக்கில் உள்நுழைந்து உங்களுக்கான 20GB அளவான 3G டேட்டாவை எக்டிவ் செய்து கொள்ள முடியும்.
மேலும் உங்களது 20 GB இன்டர்நெட் டேட்டா பேக்-ஐ நீங்கள் யார் யாருடன் எல்லாம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களோ, அவர்களின் போன் நம்பர்-ஐ வழங்குவதன் மூலம்மிக இலகுவாக ஷேர் செய்து கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தி தந்து இருக்கிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.

ஆகவே வெறும் 50 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த அருமையான இன்டர்நெட் பேக்-ஐ அக்டிவ் செய்து கொள்ள இங்கே கிளிக் செய்து (BSNL 'செல்ப் கேர் போர்டல்'-இல்) கணக்கொன்றை ஆரம்பித்து கொள்ளுங்கள்.
பி.எஸ்.என்.எல் இந்த டேட்டா பேக் ஆபரை அறிவிக்க ஒரு சில தினங்களுக்கு முன்னரே ரிலைன்ஸ் நிறுவனம் 75 GB அளவான 4G இன்டர்நெட் டேட்டாவை வெறும் 200 ரூபாய்க்கு வழங்கவிருப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.