சாய்பாபா வாழ்க்கை வரலாறு.



ஆன்மிகத் தலைவர் சத்ய சாய்பாபா, ஆன்மிகம், சமூக சேவை, மனிதநேயம், அன்பு, பண்பு, அறி வால் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மக்களின் உள்ள த்தில் இடம்பெற் றவர்.

இந்த நூற்றாண்டின் சிறந்த ஆன் மிகத் தலைவரான சத்ய சாய் பாபா வின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:

* 1926, நவம்பர் 23: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பெத்த வெங்கட ப்ப ராஜு & ஈஸ்வரம் மா தம்பதியரின் மகனாக சத்ய சாய்பாபா பிறந் தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சத்யநாராயண ராஜு.

* 1940, மார்ச் 8: சாய்பாபா தனது 14வது வயதில், புட்டபர்த்திக்கு அரு கே உள்ள உரவகொண்டா என்ற இடத் தில் தேள் கடித்து மயக்க மடைந்தார். மயக் கம் தெளிந்து எழுந்ததும் சிரித்தார், அழு தார், பாடினார். அவரது செயல்கள் புரியாத புதிராக இருந்தன. அன்று முதல் அவரது வாழ்க்கை திசை மாறியது என்கிறார் அவரது சகோதரர் சீஷம்மா ராஜு.




* 1940, மே 23: சாய்பாபா தனது பெற்றோர், சகோதரர்களை அழைத்தார். அனைவரின் முன்னிலையில் காற்றிலிருந்து இனிப்பு, விபூதி உள்ளிட்ட பொருட்களை வரவழைத்து கொடுத் தார். தனது மகனுக்கு ஏதோ பிடித்து விட்டது என்று நினைத்து பிரம்பை எடுத்து, ‘யார் நீ, உனக்கு என்ன வே ண்டும்’ என்று கேட்டார். அதற்கு சாய் பாபா, ‘நான்தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் அவதாரம்’ என்றார். அன்று முதல் சத்யநாராயண ராஜு, சத்ய சாய்பாபா என்று அழைக்கப் பட்டார்.

* 1944: சாய்பாபா, குடும்பத்தில் இரு ந்து பிரிந்து புட்டபர்த்தி அருகே கட்டப் பட்டுள்ள கோயிலில் வசிக்கத் தொட ங்கினார். ஆன்மிக பயணமாக பெங்க ளூருக்கு சென்றார். தூய வெள்ளை நிறத்தில் நீண்ட சட்டை மற்றும் வேஷ்டி கட்டியிருந்தார். பின்னர் காவி உடைக்கு மாறினார்.

* 1950, நவம்பர் 23: புட்டபர்த்தியில் Ôபிரசாந்தி நிலையம்Õ என்ற பிரமாண்ட ஆசிரமம் கட்டி, சாய்பாபா தன து 28வது பிறந்த நாளில் திறந்து வைத் தார்.

* 1957, அக்டோபர்: பிரசாந்தி நிலைய வளா கத்தில் இலவச மருத்துவமனையை திறந்தார்.

* 1968, ஜூன் 29: சாய்பாபா, முதன் முத லாக ஆன்மிக பயணமாக நமிபியா, உகா ண்டா ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.

* 1968, ஜூலை 22: ஆந்திர மாநிலம், அனந் தபூரில் மகளிர் கல்லூரியை திறந்து வைத் தார்.

* 1968: மும்பையில் ஆன்மிகம் மற்றும் சமுக சேவைக்காக தர்மஷேத்ரா அல்லது சத்யம் மந்திர் ஒன்றை நிறுவினார்.

* 1972: ஆன்மிக மற்றும் சமுக பணிகளை நிர்வகிக்க ஸ்ரீசத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட்டை நிறுவினார்.

* 1973: ஐதராபாத்தில் சிவம் மந்திர் நிறுவி னார்.

* 1981, நவம்பர் 22: புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.

* 1981: சென்னையில் சுந்தரம் மந்திர் நிறுவ ப்பட்டது.

* 1993, ஜூன் 6: பாபாவின் படுக்கை அறைக் குள் திடீரென மர்ம நபர்கள் நுழைந்து அவரை தாக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கும், ஆசிரமத்தின் தொண்டர் களுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஆசிரம தொண்டர்கள் 2 பேரும் பலியானார்கள்.

* 1995, மார்ச்: ஆந்திர மாநிலத்தில் வறண்ட பிரதேசமாக ராயலசீமா பகு தியில் சுமார் 12 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் மெகா குடிநீர் திட்ட த்தை நிறைவேற்றினார்.

* 1999: மதுரையில் ஆனந்த நிலை யம் மந்திர் நிறுவினார்.

* 2001: ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கு வசதி யாக பெங்களூரில் நவீன பல்நோக்கு மருத்துவமனையை நிறுவி னார்.

* 2005: உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடி, அருளாசி வழங்கத் தொடங்கினார்.

* 2006: இரும்பு நாற்காலி ஒன்று விழுந்ததில் சாய்பாபாவின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது.

* 2011, மார்ச் 28: மூச்சு திணறல் காரணமாக, புட்டபர்த்தியில் உள்ள நவீன மருத்துவ மனையில் சத்ய சாய்பாபா சேர்க்கப்பட்டார்.

* 2011, ஏப்ரல் 24: ஞாயிற் றுக்கிழமை காலை 6.25 மணியளவில் சத்ய சாய் பாபா காலமானார்.




மறுபிறவி எடுப்பேன்

********************************

கடந்த 1940, மே 23ம் தேதி தனது 14வது வயதில், ‘நான்தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் அவதாரம்‘ என்று கூறினார் சத்ய சாய்பாபா. அன்று முதலே சத்ய சாய்பாபா என்று அழைக்கப்பட்டார். பின்னர் கடந்த 1963ம் ஆண்டு சாய்பாபாவுக்கு பக்கவாதமும், மாரடைப்பும் ஏற்பட்டது. அவற்றில் இருந்து குணமடைந்த பாபா, ‘கர்நாடக மாநிலம், மாண்டியா நகரில் பரத்வாஜா கோத்ரத்தில் பிரேம சத்ய சாய்பாபாவாக எனது அடுத்த பிறவி இருக்கும்’ என்று அறிவித்தார். அதனால், பாபாவின் அடுத்த பிறவி நிச்சயம் இருக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.




அன்பால் கவர்ந்தவர்

*******************************

லட்சக்கணக்கான பக்தர்களை அன்பால் கவர்ந்த சாய் பாபாவை, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என்று அவரை சந்தித் தவர்கள் ஏராளம். அவர்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி