வாகன ஆவணங்கள் தேவையில்லை 'மொபைல்' இருந்தால்போதும்!

இனி வாகனத்தை எடுக்கும்போது, லைசென்ஸ் இருக்கா, ஆர்.சி., புக் இருக்கா என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை; கையில் மொபைல் வைத்திருந்தால் போதும்; டிராபிக் போலீசிடம் சிக்க வேண்டிய அவசியமில்லை. தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது; இங்கு, 'எம் வாலட்' எனப்படும், மொபைல், 'ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த, 'ஆப்'பில், வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிராபிக் போலீசிடம், மொபைல் போனில் உள்ள இந்த ஆவணங்களை காட்டலாம்.நாட்டிலேயே முதல்முறையாக, தெலுங்கானாவில், இந்த, 'ஆப்' வசதியை, மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி.ராமாராவ், போக்குவரத்து அமைச்சர் பி.மகேந்தர் ரெட்டி, அறிமுகம் செய்தனர்.

சிறப்பம்சம்:
* ஆவணங்களை கையில் எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை
* இரண்டு வண்டிகள் இருந்தாலும், அந்த ஆவணங்களை, இந்த, 'ஆப்'பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
* முதல்முறை மட்டும் இணைய வசதி தேவை
* வாகனத்துக்கான, ஆர்.சி., புக் எனப்படும் பதிவுச் சான்றிதழ், வாகன ஓட்டுனர் உரிமம், காப்பீட்டு சான்றிதழ் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்யலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி