நாடு முழுவதும் இண்டர்நெட் இணைப்பு : மத்திய அரசு திட்டம்.!!

ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தியாவில் இண்டர்நெட் மோகமும் வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் இண்டர்நெட் இணைப்பு வழங்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு ப்ராட்பேன்ட் வசதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இத்தகவலை மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்தின் தலைவர் ஜெ.எஸ் தீபக் தெரிவித்துள்ளார்.வளர்ச்சி நாடு முழுவதும் இருக்கும் அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் ப்ராட்பேன்ட் இணைப்பு வழங்கும் பாரத நெட் திட்டம் குறித்து அவர் கூறும் போது 'இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் ப்ராட்பேன்ட் இணைப்பு வழங்கப்பட்டு சமமான டிஜிட்டல் வளர்ச்சியை எட்ட முடியும்' என்றார்.ஆப்டிக் ஃபைபர் 2018 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் இருக்கும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் ஃபைபர் ஆப்டிக் மூலம் இணைடர்நெட் வசதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இலக்கு ஏற்கனவே நாடு முழுவதும் இண்டர்நெட் இணைப்பு வழங்க டிசம்பர் 2016 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.கவனம் நாடு முழுவதும் இண்டர்நெட் இணைப்பு வழங்கும் அதே நேரம், இணைப்பு, மொழி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவின்மை போன்றவைகளிலி அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி