இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவு தேர்வு தரவரிசைக்கு ப்ளஸ் 2 மார்க் எடுத்துக் கொள்ளப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே சமயம், ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு ப்ளஸ் 2 தேர்வில் குறைந்த பட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என ஐஐடி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதி அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.