புதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறது மத்திய அரசு

இன்னும் ஒரு ஆண்டுக்குள் 2.2 லட்சம் ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2015ம் வருடம் மார்ச் 1ம் தேதி வரையில் மத்திய அரசில் 33.05 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தனர். இதனை இந்த ஆண்டு 34.93 லட்சமாகவும், அடுத்த ஆண்டு மார்ச்1க்குள் 35.23 லட்சம் ஊழியர்களாவும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ரயில்வே துறையிலும் ஆட்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ரயில்வேயில் 13,26, 437 பேர் பணிபுரிகின்றனர். கடந்த 3 வருடங்களாக பணி நியமனங்கள் எதுவும் நடைபெறவில்லை. பாதுகாப்பு படையில் ஆட்கள் நியமனம் செய்யப்டுவது சந்தேகம் தான். வருமான வரி, சுங்கத்துறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை 70 ஆயிரமாக அதிகரிக்கப்பட உள்ளது. மத்திய துணை ராணுவப் படையினரின் எண்ணிக்கையும் 47 ஆயிரம் அதிகரிக்கப்பட உள்ளது. உள்துறை அமைச்சகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் அதிகரிக்கப்பட உள்ளது.

மத்திய அமைச்சகத்தில், 301 ஊழியர்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு 900 ஊழியர்களாக இருந்த இத்துறையில், 2017 மார்ச்1ல் 1201 ஊழியர்கள் பணிபுரிவார்கள். தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் கடந்த இரண்டு வருடத்தில், 2200 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களை நிர்வகிக்கும் தனித்திறன் அமைச்சகத்தில், 1800 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தில் 6 ஆயிரம் பேரும், நிலக்கரி அமைச்சகத்தில் 4,399 பேரும், விண்வெளி துறையில் ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி