18,000 ஏழை குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிய ஜோ ஹோமன்: மதுரை அருகே மணிமண்டபம் கட்ட ஏற்பாடு

மதுரை அருகே 18,000 ஏழைக் குழந் தைகளுக்கு கல்வியுடன், தொழி லும் கற்றுக் கொடுத்து வேலை வழங்கி வாழ்க்கையில் ஒளியேற்றி யவர் நெதர்லாந்தை சேர்ந்த ஜோ ஹோமன் (85). கடந்த மார்ச் 30-ம் தேதி, மதுரை அருகே ஆலம்பட்டி யில் மறைந்த அவரது நினைவாக, மணிமண்டபம் கட்டுவதற்கான ஏற் பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லாரன்ஸ் எயிடரியன் ஹோமன், மேரி ஹோமன் தம்பதிக்கு மகனாகப் பிறந்த 10 குழந்தைகளில் 4-வதாக பிறந்தவர் ஜோ ஹோமன். இவர் பள்ளி படிப்பை தொடரும்போதே, இவரது குடும்பம் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தது. அங்கு எம்ஏ ஹானர்ஸ் படிப்பை முடித்தார் ஜோ ஹோமன்.அங்கிருந்து 1962-ம் ஆண்டு மது ரைக்கு வந்த அவர் நாகமலை புதுக் கோட்டையில் உள்ள பாய்ஸ் டவுன் என்ற கிறிஸ்தவ நிறுவனத்தில் சேர்ந்தார். மதமாற்றத்தை முக்கியப் பணியாக கொண்டிருந்தது அந்த நிறுவனம். ஆனால், ஜோ ஹோம னுக்கோ மதமாற்றம் செய்வது பிடிக்கவில்லை. இயல்பாகவே சேவை மனப்பான்மையைக் கொண் டிருந்த அவர், அந்த வேலையைத் தொடராமல் மீண்டும் இங்கிலாந்து சென்றார்.

ஆனால், இங்குள்ள ஏழைகளின் அவலநிலை கண்டு மனம் பொறுக் காமல், மீண்டும் மதுரைக்கே திரும் பினார். அப்போது, ரயில் நிலை யத்தில் ஆதரவின்றி சுற்றித் திரிந்த 5 ஏழைச் சிறுவர்களை அழைத்துக் கொண்டு கப்பலூர் சென்றார். 1965-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி அங்கு சிறிய கோழிப் பண் ணையை அமைத்த அவர், அதில் கிடைத்த வருவாயைக் கொண்டு அ

ந்த சிறுவர்களுக்கு உணவு வழங்கியுள்ளார். பின்னர் அந்தச் சிறுவர்களுக்கு தொழிலைக் கற் றுக் கொடுக்க ஆரம்பித்தார். பின்னர் ஆலம்பட்டியில் முதன் முதலாக பாய்ஸ் டவுன் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.




கோழிப் பண்ணை மூலம் கிடைத்த வருமானம் மற்றும் இங்கி லாந்தில் இருந்த தனது குடும்பத் தினர், நண்பர்கள் அளித்த நிதி உதவியுடன் ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். அவர்களுக்கு விவசாயம், தொழிற் கல்வியை கற்றுக் கொடுத்தார். கல் விக்குப் பின்னர் வேலை வாய்ப்பை உருவாக்கி, அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற் கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.




1980-ம் ஆண்டு தொடக்கம் வரை விவசாயம், கோழிப் பண்ணை தொழிலில் ஈடுபட்டு வந்த இந்த நிறுவனம் அதன்பின் கல்லூரிப் படிப்பு, தொழிற்கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்தது. பாய்ஸ் டவுன் நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் 600 குழந்தைகளுக்கு தங்குமிடம், உணவு மற்றும் இல வசக் கல்வி வழங்கப்பட்டு வருகி றது. தனது கடும் முயற்சியால் திருமங்கலம் பாய்ஸ் டவுன், ராஜ பாளையம் பாய்ஸ் டவுன், பெரும் பாறை பாய்ஸ் டவுன் உள்ளிட்ட 11 நிறுவனங்களை ஜோ ஹோமன் தனது வாழ்நாளில் உருவாக்கி யுள்ளார்.




மரம் வளர்ப்புத் திட்டம், கிராம வளர்ச்சித் திட்டம், கிராமங்களில் இலவச மருத்துவத் திட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புத் திட்டம், பெண்களுக்கு பெண்களே உதவும் திட்டம், சேரிக் குழந்தைகள் நலத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட் டங்களை செயல்படுத்தினார்.




முதுமையில் கொடைக்கானல் பெரும்பாறையில் தங்கிய அவர், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கும் வகையில் பெரும்பாறை சுற்றுச்சூழல் மையத்தை 2008-ம் ஆண்டு தொடங்கினார். இங்கு வண்ணத்துப்பூச்சி பூங்கா, பறவை களை பார்வையிடுதல் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆலம் பட்டி பாய்ஸ் டவுனின் 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.




2013-ம் ஆண்டு ‘மைல்ஸ் ஓ ஸ்மைல்ஸ்’ என்ற சுயசரிதையை ஜோ ஹோமன் வெளியிட்டார். அதில் அவர் ‘நான் நன்றியை எதிர் பார்க்கவில்லை; இந்த சமுதாயத் துக்கு நான் வழங்கியதைவிட இறைவன் அதிகமான கொடை களை எனக்கு அளித்துள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.




1930-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி பிறந்து தனது வாழ்நாளில் சுமார் 18 ஆயிரம் ஏழைக் குழந் தைகளின் வாழ்க்கையில் ஒளி யேற்றிய ஜோ ஹோமன் ஆலம்பட்டி பாய்ஸ் டவுனில், கடந்த மார்ச் 30-ம் தேதி தனது 85-வது வயதில் உயிர் நீத்தார். கிறிஸ்தவ பாதிரியாராக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஏழைகளின் வாழ்க்கையில் ஒளி யேற்றிய அவர், கடைசிவரைதான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார். பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளும் அங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தற்போது பாய்ஸ் டவுன் தொண்டு நிறுவனங்களின் செயலாளராக நாராயணராஜா என்பவர் ஜோ ஹோமனின் சேவைப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.




மார்ச் 30-ம் தேதி மறைந்த அவரின் உடல் மதுரையில் எரியூட்டப்பட்டு ஆலம்பட்டியில் 32 ஏக்கர் பரப்பள வில் உள்ள பாய்ஸ் டவுனில் கல் லறை எழுப்பப்பட்டுள்ளது. ஜோ ஹோமனின் நினைவாக கல்லறை உள்ள இடத்தில் விரைவில் மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் இறந்தாலும் அவர் ஏற்றி வைத்த ஒளி விளக்கு ஆயிரக் கணக்கான ஏழைக் குழந்தைகளின் மனதில் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி