எஸ்பிஐ வங்கியில் 17,000 கிளர்க் பணியிடங்கள் காலி.....


எஸ்பிஐ வங்கியில் 17,000 கிளர்க் பணியிடங்கள் காலி.. பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!

 வங்கி பணியில் சேர விரும்புவோருக்கு ஒரு நற்செய்தி, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வங்கி வரிவாக்கத்திற்கும், சேவையின் தரத்தை உயர்த்துவதற்கும் சுமார் 17,070 கிளார்க் பணியிடங்களை உருவாக்கியுள்ளது.
17,070 பணியிடங்கள்.


17,070 பணியிடங்கள்
எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது வங்கியில் 10,726 பேரை வழக்கமான முறையிலும், 3,336 பேரை ஸ்பெஷல் ஆட்சேர்ப்பு முறையிலும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களில் அமர்த்தப்பட உள்ளது.

விவசாயப் பிரிவு

விவசாயப் பிரிவு
மேலும் 3,008 பேரை விவசாயப் பிரிவிற்கான ஜூனியர் அசோசியேட் பணியிடங்களில் பணியாற்ற உள்ளனர். இதனால் நடப்பு நிதியாண்டில் எஸ்பிஐ வங்கியில் பணியாற்ற சுமார் 17,070 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பட்டதாரிகள்

பட்டதாரிகள்
இப்பணியிடங்களுக்கு 20-28 வயதுடைய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் சலுகை மற்றும் பிற விதிவிலக்குகளில் எவ்விதமான மாற்றமுமில்லை.
ஆன்லைன் விண்ணப்பம்

ஆன்லைன் விண்ணப்பம்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏப்ரல் 5 முதல் 24ஆம் தேதி வரையில் காலக்கெடுவை விதித்துள்ளது எஸ்பிஐ நிர்வாகம்.
முதற்கட்ட தேர்வு

முதற்கட்ட தேர்வு
இந்நிலையின் விண்ணப்பித்தோருக்கு வருகிற மே அல்லது ஜூன் மாதத்தில் முதற்கட்ட தேர்வு நடைபெறும் என எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வங்கி இணைப்பு

வங்கி இணைப்பு
இந்தியாவில் இருக்கும் 15க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு வெறும் 4 வங்கிகளாக இணைக்க முடிவு செய்துள்ளது. இதனால் அரசு வங்கிகளில் அதிகளவிலான ஊழியர்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி